இந்த மாதிரி விளையாடிய அவருக்கு உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் – முன்னாள் வீரர்கள் பாராட்டு.

ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொ

By ·

ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இந்நிலையில் அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து பலமான பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை விளாசி 266 என்ற ஒரு தாக்குப்பிடிக்க கூடிய ஸ்கோருக்கு கொண்டுவந்தனர். ஆனால் அதற்கு பிறகு மழை காரணமாக இரண்டவது இன்னிங்ஸ் நடக்காமல் போனது. .இப்படிபட்ட நிலையில் தான் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் இந்த பொறுப்பான ஆட்டம் குறித்து பேசியுள்ளனர் முன்னாள் வீரர்கள்.

இந்நிலையில் சிறந்த பவுலிங்கை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய இஷானுக்கு வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இது பற்றி வாசிம் அக்ரம் பேசுகையில் “இந்த இன்னிங்ஸ் இஷான் கிஷானுக்கு நம்மால் எந்த இடத்திலும் விளையாட முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கியமான 4வது இடத்தில் அசத்தும் அளவுக்கு அவர் சிறப்பாக விளையாடினார்.

மேலும் ரவி சாஸ்திரி பேசுகையில் “ஒரு பேட்ஸ்மேனாக வலுவான அணிகளுக்கு எதிராக நாங்கள் அடிக்கவில்லை என்ற குறையுடன் நீங்கள் வந்துள்ளீர்கள். உங்களுக்கு எதிரணியை பற்றி நன்றாக தெரியும். அதில் ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி போன்ற சிறப்பான பவுலர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட டாப் 3 பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடியது அவருடைய தன்னம்பிக்கையில் பெரிய ஆச்சரியங்களை ஏற்படுத்தக் கூடியதாகும்.

தற்போதைய இந்திய அணியில் வளைவுத்தன்மை தேவைப்படும் சூழ்நிலையில் இசான் கிசான் உலகக் கோப்பையில் தம்முடைய இடத்திற்காக போராடுகிறார். மேலும் வலுவான அணிகளுக்கு எதிராக வலது கை பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்க உங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை. எனவே கேஎல் ராகுல் நல்ல வீரராக இருந்தாலும் இசான் கிசான் போன்ற வீரர்களுக்கான கதவை இந்தியா திறந்து வைத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை