மேக்ஸ்வெல்லை கூட அவுட் பண்ணலாம்.. ஆனால் இவருக்கு எதிரா வாய்ப்பே இல்லை – வாசிம் அக்ரம் புகழாரம்.
உலக கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்தியா தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முட
உலக கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்தியா தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து 410 ரண்களை குவித்து இருந்தனர்.
84 பந்துகளில் தனது உலகக்கோப்பை முதல் சதத்தை பூர்த்தி செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். அதன் பின்பு அதிரடியை காட்டதொடங்கிய கே.எல் ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார் 102 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 128ரன்களையும் குவித்து இருந்தார். இதன் மூலம் இந்தியா அதிகமான ரன்களை விலாச முடிந்தது. மேலும் நெதர்லாந்து அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வெல்லவும் முடிந்தது.
இந்நிலையில் கேஎல் ராகுல் இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தையும் அதே நேரத்தில் இந்திய அணிக்கு ஒரு பலமான நம்பர் 5 இடத்தில் இறங்கும் பேடினஸ்மேனாகவும் அற்புதம் காட்டிவரும் கே எல் ராகுலை பலரும் பாராட்டிவரும் நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரரான வாசிம் அகரம் பாராட்டி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “மேக்ஸ்வெல்லுக்கு எதிராக கூட ஒரு பந்துவீச்சாளராக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், ஆனால் ராகுலுடன் எதிராக கிடைக்காது. அவர் ஒரு சரியான தொழில்நுட்ப பேட்டர். அவர் டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடக்க வீரர். இப்போது அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது, அவர் அதில் சிறப்பாக செயல்படுகிறார்
உலக கிரிக்கெட்டில் 5வது இடத்தில் உள்ள சிறந்தவர். கிளாசென் ஹென்ரிச் போட்டியில் ஒரு தொடக்கம் கிடைக்கக் செ ஒரு அடிப்படை தேவை. ஆனால் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்திய அணிக்கு 5வது இடத்தில் சிறந்த பேட்டர் இருக்கிறார். அவர் எந்த சூழ்நிலையிலும் விளையாட முடியும். இந்தியா இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகளை முன்கூட்டியே இழந்தால், அவர் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடக்கூடிய ஒருவர்.
அவரால் போட்டியை வென்று கொடுக்க முடியும், இம்ப்ரூவ் செய்ய முடியும், நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாட முடியும் அதனை இன்று பார்த்தோம். சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடினார். பில்டர் இல்லாத இடங்களாக அவர் தேர்ந்தெடுத்து மைதானத்தில் விளையாடுகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்தான் போட்டியை முடித்தார் என்று கூறியுள்ளார் மாலிக்.