ரோஹித் சர்மா ஒரு ஹீரோ.. அறிவாளி – முன்னாள் ஜாம்பவான்கள் வீரர்கள் புகழாரம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டி

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டு 397 ரன்களை குவித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியால் இந்த அழுத்தமான சூழ்நிலையை தாக்கு பிடிக்க முடியாமல் 48.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை மட்டுமே அடித்து ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றிக்கு பெரும் காரணமாக முகமது சமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் இந்திய அணி உலக கோப்பை இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.

இது ஆட்டத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு முழுமையான செயல்திறன், அவர் ஒரு சதம் அடிக்காததால் ரோஹித்தின் பெயர் அவ்வளவாக வரவில்லை, ஆனால் அவர் தொடங்கும் விதம், 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார் முதல் 10 ஓவர்களில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடித்து 84 ரன்கள் வருவதற்கு ரோஹித் சர்மா உதவினார். அதுதான் மிகப்பெரிய போட்டி. அது எதிரணியின் மீது அழுத்தம் செலுத்துகிறது என்றார் வாசிம் அக்ரம்.

இந்திய அணியின் கலாச்சாரத்தை மாற்றிய உண்மையான ஹீரோ ரோஹித் ஷர்மா. முதல் முறையாக அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, ​​​​குரூப் ஸ்டேஜ் செய்த ஒரு விஷயத்தை மீண்டும் நாக் அவுட் ஸ்டேஜில் நீங்கள் செய்ய முடியுமா? அச்சமின்றி கிரிக்கெட் விளையாட முடியுமா? என்பதை அனைவர்க்கும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காட்டினார். மேலும் ட்ரெஸிங் ரூமில் இருக்கும் தங்களுடைய மனநிலையை போட்டியிலும் காட்டினார் என்றார் ஹுசைன்.

இந்நிலையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு சென்ற நிலையிலும் அதே நேரத்தில் இந்த உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடப்பதாலும் கண்டிப்பாக இந்த முறை இந்தியா உலக கோப்பையை வெல்லும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் ஜாம்பவான் கிரிக்கெட்டர்களும் கணித்துள்ளது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை