உலக கோப்பையில் இந்த விஷயம் இந்தியாவிற்கு கடினமாக இருக்கும் – பாகிஸ்தான் ஜாம்பவான்.

கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்

By ·

கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த 2021 டி20 தொடரில் பாஸ்கிதான் அணியிடம் வீழ்ந்த இந்தியா வரும் உலக கோப்பை தொடரிலும் வீழ்ந்தது என்றால் கண்டிப்பாக அது பிசிசிஐ மீதும் இந்திய அணியின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், இதனால் இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டியா கட்டாயத்தில் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்தான் பாஸ்கிதான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் இந்தியா vs பாஸ்கிதான் போட்டி குறித்து பேசியுள்ளார்.

வாசிம் அக்ரம் கூறியது :

இந்தியாவில் தற்போது திறமையான பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். முகமது ஷமி சமீப காலமாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தன்னுடைய பழைய பார்மிற்கு திரும்பி ஃபிட்டாக இருக்க வேண்டும். உடற்தகுதியைப் பொறுத்தவரை அவரது நிலைமை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் சிறப்பாக பந்துவீச்சினால் அது மிகப்பெரிய வித்தியாசத்தை இந்திய அணிக்கு போட்டிகளின் போது ஏற்படுத்தும்.

இவர்களை தவிர இந்தியாவிடம் நல்ல ஸ்பின்னர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அவர்களில் ஜடேஜா மற்றும் அஷ்வின் சிறப்பாக பந்துவீசியாமலும் அவர்களில் யார் விளையாட போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் தற்போது சில திறமையான வீரர்கள் வந்திருக்கின்றனர். ஆனால் சொந்த மைதானத்தில் விளையாடுவதினால் சில குறைபாடுகள் உள்ளன.

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்றது. ஆனால் இந்தியாவிற்கு எப்போதும் கூடுதல் அழுத்தம் உள்ளது. பாகிஸ்தானுக்கும் அப்படித்தான் அவர்கள் புரவலர்களாக இருந்தால் அவர்கள் மீது அழுத்தம் இருக்கும். நான் முள்ளனர் சொன்னதை இப்போன்றுதான் ஒரு குறிப்பிட்ட தேதியில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் விளையாடச் சொன்னால், நாம் விளையாட வேண்டும். அது அகமதாபாதாக இருந்தாலும் சரி சென்னையாக இருந்தாலும் சரி கொல்கத்தா அல்லது மும்பையாக இருந்தாலும் சரி. இது வீரர்களை பாதிக்காது. எனவே விளையாடுங்கள் மைத்தனங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று வாசிம் அக்ரம் கூறினார்.

இந்நிலையில் கடந்த 2021 T20 உலகக் கோப்பையில் இந்தியாவை இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியது, மேலும் சமீபத்தில் ACC வளர்ந்து வரும் கோப்பையின் இறுதிப் போட்டியையும் பாஸ்கிதான் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் அடுத்து வரும் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையில் எப்படியாவது வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறது இந்தியா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை