இந்தியாவை வீழ்த்த இவர்களால் மட்டுமே முடியும் – வாசிம் அக்ரம் அதிரடி கருத்து.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்று 37 ஆவது போட்டியை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணியும் தென்ஆப்பிரிக்கா அணியும் மோதின. இந்திய அணி இந்த உலக கோப்பை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற முதல் இடத்தில் மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்று தகுதி வாய்ந்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் விராட் கோலி தன்னுடைய 49 வது சதத்தை விளாசி கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இதனை தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு பெரும் அதிர்ச்சியாக தொடக்கம் முதலே விக்கெட்டுகள் விழுந்தது. இந்தியாவின் அற்புதமான பந்துவீச்சின் காரணமாக 83 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாபிரிக்க அணி பெரும் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் திருப்பு முனையாக செயல்பட்டார்.
இந்நிலையில் இந்த வெற்றியுடன் இந்திய அணியானது அதிகார பூர்வமாக இந்தியா அரையிறுதி போட்க்குள் நுழைந்து விட்டது. இருந்த போதிலும் அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி விளையாடும் என்பது இங்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் 8 அணிகளையும் வென்ற இந்தியா அரையிறுதி போட்டியில் அவர்களுக்கு எதிராக சுலபமாக வெல்ல இன்னும் கடுமையாக போராடும் என்பதினால் இறுதி போட்டிக்கு செல்வதும் இந்தியாவுக்கு சுலபமாக இருக்கும்.
இந்த சூழ்நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரர் வாசிம் அக்ரம் இந்திய அணி குறித்து பேசியுள்ளார். அவர் கொடுத்து பேட்டியில் கூறுகையில் “இப்போதைக்கு ரெஸ்ட் ஆஃப் தி வேல்ர்ட் மற்றும் இந்தியா அணிகள் மோதுவதே நியாயமாக இருக்கும். ஏனெனில் ஃபீல்டிங், பேட்டிங், பவுலிங் ஆகிய 3 துறைகளிலும் இந்தியா அற்புதமாக செயல்படுகிறது. முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவர்கள் போட்டியை மொத்தமாக கட்டுப்படுத்துகின்றனர்.
மேலும் இந்தியாவும் செயல்பாடு அபாரமானது. இப்போட்டியில் சதமடித்து தன்னை நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என்பதை நிரூபித்த விராட் கோலிக்கு வாழ்த்துக்கள். ஆரம்பத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அணியின் அழுத்தத்தை நீக்கினார். 2வது விக்கெட் விழுந்ததும் போட்டி தென்னாபிரிக்காவின் கையிலிருந்து இந்தியாவின் பக்கம் வந்தது என்று பாராட்டியுள்ளார் வாசிம் அக்ரம்.