சச்சின் சாதனையை யாருமே முடியடிக்க முடியாது என நினைத்தேன் – விராட் கோலிக்கு புகழாரம் சுட்டிய முன்னாள் ஜாம்பவான்.
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சில
உலக கிரிக்கெட்டில் முக்கியமான பங்குவகிப்பது இந்திய அணி. கடந்த 20 வருடங்களில் இந்திய அணியில் பல விதமான மாற்றங்கள் நடந்து விட்டது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகள் வருடம் முழுவதும் நடிந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர். மறுபுறம் அவர்களின் சிலர் மட்டுமே இந்திய அணியில் அதிக காலம் நீடித்து நிலையாக இருக்க முடிகிறது. அந்த வகையில் ஒருவரை கூற வேண்டும் என்றால் விராட் கோலியை கூறலாம்.
கடந்த பல வருடங்களாக சிறப்பாக விளையாடி வரும் இவர் உலக கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரன் மெஷின் என்று பாராட்டும் அளவிற்கு பல சாத்தனைகளை படைத்து வருகிறார். மேலும் இன்னும் சில காலங்களில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் என்ற சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்த நிலையில் அதை முறியடிக்க இருக்கிறார் விராட் கோலி.
இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் கிரிக்கெட்டில் விராட் கோலியின் ஆளுமையை. நேற்று முன்தினம் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் விராட் கோலி தன்னுடைய 48வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் சச்சின் சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னமும் 1 சதம் மட்டுமே தேவை. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை யாரும் முறியடிக்க மாட்டார்கள் என்று தப்பு கணக்கு போட்டதாக கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.
அவர் பேசுகையில் “சாதனைகள் முறியடிக்க பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சச்சினின் சாதனையை யாரும் முறியடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் நான் தவறாக நினைத்து விட்டேன் என்று நினைக்கிறேன். இன்னும் ஓன்று அல்லது இரண்டு சதங்கள் மட்டும் தான். விராட் கோலி 48 சதங்களுடன் இருக்கிறார், டெண்டுல்கருக்கு 49 சதங்களை எடுத்திருக்கிறார். ஆனால் விராட்கோலியின் 48 என்று சொல்வது மிகவும் எளிதானது.
ஆனால் நீங்கள் அதை நினைக்கும் போது, ஒரு வடிவத்தில் 48 ODI சதங்கள் என்பது நம்பமுடியாதது. எங்கள் காலத்தில் 15 முதல் 16 சதங்களை அடிப்பது என்பது வாழ்க்கை சாதனையாக இருந்தன. இப்போது நாங்கள் 50 சதங்களை பற்றி நாம் பேசுகிறோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. விராட் கோலி வேறொரு கிரகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது.
அவர் சராசரியாக 63-65 துரத்துகிறார். ஓரிரு ஆட்டங்களில் மட்டுமல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் அவர் அதனை செய்கிறார். இளைஞர்கள் விராட் கோலியிடம் இருந்து ஆர்வத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அவரது விளையாட்டில் அவருக்கு திருப்தி இல்லை. இரவில் அவர் தனது சதத்தை பற்றி பிரமிக்கலாம். இன்று அவருக்கு அது சரித்திரம். இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார். அதை விராட் கோலி அழகாக செய்கிறார் என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.