விராட் கோலியா? பாபர் அசாமா? முன்னாள் பாகிஸ்தான் வீரர் கொடுத்த வெளிப்படையான பதில்.
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்
கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.
இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது.இதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவே இந்தியா vs பாஸ்கிதான் போட்டியானது நடக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கு அதிகரித்துள்ளது. மறுபுறம் கேஎல் ராகுல் காயத்தால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவது இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது. அதனால் அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது சோதனைகளை செய்வது போன்றவற்றால் தங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை இந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயம் தோற்கடிக்கும் என அந்நாட்டை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் சவால் விட்டு வருகிறார்கள்.
அதை விட தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் அப்ரிடி 2021 டி20 உலகக் கோப்பை போல இந்திய டாப் ஆர்டரில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களான ரோகித், கில், விராட் கோலி ஆகியோரை தெறிக்க விட்டு பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கணித்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரமிடம் விராட் கோலியா? அல்லது பாபர் அசாமா? பும்ராவா? ஷஹீன் ஷா? இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “இது மிகவும் கடினமான முடிவு, அதனால்தான் நான் தேர்வாளர் ஆகவில்லை. நான் அநேகமாக வீட்டிற்கு திரும்பி வருவேன். ஆனால் நான் தேர்வாளராக இருந்தால் நிச்சயமாக பாபர் ஆசாமை விட விராட் கோலியைத் தேர்ந்தெடுப்பேன். பாபர் நவீன கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் நவீன பெரியவர்களில் ஒருவர், ஆனால் அதற்கு இன்னமும் சிறிது நேரம் எடுக்கும். அவர் கண்டிப்பாக அந்த இடத்திற்கு வருவார் ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்.
நான் ஜஸ்பிரித் பும்ராவை விட ஷஹீன் ஷா அப்ரிடியை தேர்வு செய்வேன். இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதால், அவர் ஸ்டார்க்கை எனக்கு நினைவூட்டுகிறார். இருவரும் ஆரம்பத்தில் பந்து வீசுகிறார்கள், அவர்கள் அதை முழுவதுமாக பிட்ச் செய்து விக்கெட்டுகளுக்கு செல்கிறார்கள். அதுதான் அவரைப் பற்றி எனக்கு பிடிக்கும். அவர் அவர் கடுமையான காயங்கள் ஏற்படாத வரையில் அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றார் வாசிம் அக்ரம்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “அவர் தனது பேட்டிங்கையும் நம்பர்.9 மற்றும் நம்பர் 10ல் மேம்படுத்தியுள்ளார். அதோடு அவரினால் உள்ளே வந்து இரண்டு சிக்ஸர்களை அடிக்க முடியும். அவர் ஒரு உண்மையான விக்கெட் எடுப்பவர், அதனால்தான் அவர் அணியின் மிக முக்கியமான உறுப்பினர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன் என்று அக்ரம் கூறினார்.