என்னையும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை விடவும் பும்ரா சிறந்தவர் – காரணத்தை கூறிய வாசிம் அக்ரம்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதினர் டாஸ் வென்று இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதினர் டாஸ் வென்று இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலக கோப்பையில் முதன் முதலாக இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. அது அவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது.

230 என்று இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து இந்தியாவின் பந்து வீசை சமாளிக்க முடியாமல் 34.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்தியாவின் அந்த அற்புதமான வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தவர் பும்ரா. பும்ரா தன்னுடைய அற்புதமான பந்துவீச்சில் மூலம் 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து எதிராக வீழ்த்தினார்.

இந்நிலையில் உலக கோப்பை தொடருக்கு முன்னாள் காயத்தால் அவதிப்பட்ட பும்ரா பின்னர் அதிரடியா காலத்தில் குறித்து தன்னுடய அற்புதமான பந்துவீச்சின் மூலம் ஆசிய கோப்பையை வென்று கொடுத்தார். அந்த போட்டி மட்டுமல்லாமல் தற்போது இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 தொடர் முழுவதும் இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் பும்ரா குறித்து பேசியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம்.

அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் “பும்ரா தற்போது உலகில் சிறந்த வீரராக இருக்கிறார். கட்டுப்பாடு, வேகம், மாறுபாடுகள் கொண்ட ஒரு முழுமையான பந்துவீச்சாளர். புதிய பந்தில், இந்த வகையான ஆடுகளத்தில் இந்த வகையான இயக்கத்தை பெற… வேகம், கேரி, ஃபாலோ-த்ரூ ஆகியவை பும்ரா ஒரு முழுமையான பந்துவீச்சாளர் என்று சொல்ல வைக்கிறது.

பும்ரா விக்கெட்டைச் சுற்றி இருந்து இடது கை ஆட்டக்காரரிடம் பந்து வீசும்போது ​​பந்து சீமில் வெளியே செல்லும். நான் புதிய பந்தில் வலது கை பேட்டர்களுக்கு அவுட்ஸ்விங்கர்களை வீசும்போது, ​​சில நேரங்களில் என்னால் பந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் என்னை விட பும்ரா நிச்சயமாக புதிய பந்தில் சிறந்த கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார்

புதிய பந்தில் அவர் பந்து வீசும் நீளம், பேட்டர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது. பும்ராவுக்கு அழுத்தம் கொடுக்க ஒரே ஒரு வழி இருக்கிறது. அவரது பந்துவீச்சு ஸ்பைக்குகளைத் திருட வேண்டும். அதை தவிர வேறு எந்த வழியும் இல்லை.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை விட பும்ரா ஏன் மிகவும் ஆபத்தானவர் ஏனென்றால் என்னிடம் கேட்டால் “அவர் அதிக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறார், அதே நேரத்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அவர்கள் நீண்ட வடிவத்தில் விளையாடுவதில்லை” என்று கூறினார் வாசிம் அக்ரம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை