கிரிக்கெட்டில் இந்த விஷயத்தை பொய்யென்று மேக்ஸ்வெல் காட்டிவிட்டார் – வாசிம் அக்ரம் ஆச்சரிய பேச்சு.
உலக கோப்பை தொடரில் நேற்று முன்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் போட்டியானது நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அவர்களுக்கு சிறப்பாக வகையில் பயன் அளித்தது. ஆப்கானிஸ
உலக கோப்பை தொடரில் நேற்று முன்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் போட்டியானது நடந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற டாஸை வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன்ஹஷ்மத்துல்லா ஷாஹிதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அவர்களுக்கு சிறப்பாக வகையில் பயன் அளித்தது. ஆப்கானிஸ்தான அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து காரணத்துக்கு 291 ரன்களை குவித்து இருந்தது.
இதனையடுத்து 292 ரன்கள் எடுத்தால் வென்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னரும் 18 ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலிய அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. பின்னர் வந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலையாக நின்று விளையாட தடுமாறிய நிலையில் அதிரடி வீரராக மேக்ஸ்வெல் களமிறங்கினார்.
அவர் தன்னுடைய அற்புதமான ஆட்டத்தினால் தனி ஒரு மனிதராக இந்த போட்டியை வென்று முடித்துள்ளார். அவருக்கு போட்டியின் இடையில் காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் தனி ஒரு மனிதராக நின்று 128 பந்துகளில் 201 ரன்களை குவித்து இருந்தார். அதில் 10 சிக்ஸர்கள் 21 பவுண்டரிகள் அடங்கும். இந்நிலையில் இந்த அற்புதமான ஆட்டத்தை பலரும் பாராட்டிவரும் நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “மேக்ஸ்வெல் உலக கிரிக்கெட்டில் இப்போது சிறந்த ஒரு நாள் வீரர் என்பதை உலகிற்கு இந்த போட்டியின் மூலம் காட்டியுள்ளார். இது நம்பமுடியாதது, இந்த மாதிரியான பேட்டிங்கை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. நான் 20 வருடங்கள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், இன்னும் 20 வருடங்கள் கிரிக்கெட்டில் உழைத்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற எதையும் நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை.
இது ஒரு ஒன் மேன் ஷோ என்றே கூறலாம். இது புராணக்கதைகளின் விஷயங்கள் போல எனக்கு தெரிந்தது. கிரிக்கெட்டில் பொதுவாக ஒரு பழமொழி உள்ளது. அதாவது ஒரு வீரர் மட்டுமே போட்டியை அணிக்காக வெல்ல முடியாது என்று. ஆனால் அதனை பொய் என தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் நிரூபித்து விட்டார் மேக்ஸ்வெல்.விளையாட்டின் போது அவருக்கு தசை பிடிப்புகள் இருந்தாலும் விளையாடுவதைத் தொடர உங்களுக்கு இதயம் இருக்க வேண்டும்.
மேலும் மெக்ஸ்வெல்லிற்கு சரியாக ஸ்ட்ரைக்கை கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனையும் நீங்கள் பாராட்ட வேண்டும். சூழ்நிலை விழிப்புணர்வு பற்றி நீங்கள் பேசும்போது, கம்மின்ஸ் அதனை சரியாக என்ன செய்தார். 68 பந்துகளில் 12 ரன்கள், அவர் தனது முக்கிய வீரருக்கு ஸ்ட்ரைக் கொடுத்து போட்டியை வெற்றி பெற வைத்தார் என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம்