விராட் கோலி ஒரு வேற்றுகிரக வாசி – முன்னாள் பாக் வீரர் வாசிம் அக்ரம் அதிரடி கருத்து

உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பை

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று முன்தினம் பங்களாதேஷ் அணியை எதிகொண்டது.

இதில் இந்திய அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு இந்தியா பந்துவீச்சாளர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் விராட் கோலி அடித்த அந்த சதம் மியாகவும் முக்கியமானது. மேலும் விராட் கோலி அந்த சதத்தின் மூலம் 70 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார். ஆனால் விராட் கோலி நேற்று சதம் அடித்ததற்கு சிலர் சோசியல் மீடியாவில் தனக்காக விராட் கோலி ஆடியதாக விமர்சனம் செய்தனர்.

ஏனென்றால் விராட் கோலி வந்த போது ஒருகட்டத்தில் அவர் சதம் அடிப்பதற்கும், வெற்றி பெறுவதற்கு ஒரே அளவு ரன்கள் மட்டும் தான் தேவைப்பட்டது. இதனால் அவர் சிங்கில் எடுக்காமல் ரன்களை எடுத்தார். ஆனால் உடனிருந்த கேஎல் ராகுல் தான் சொல்லிதான் விராட் கோலி அப்படி செய்ததாக கூறினார். இருந்த போதிலும் விமர்சனம் செய்பவர்கள் விமர்சித்து கொண்டே தான் இருந்தார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூட விராட் கோலியின் சதத்தை விமர்சனம் செய்த நிலையில் விராட் கோலி வேற்று கிரகத்தில் இருந்து வந்தனர் என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம். அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ” விராட் கோலி அந்த போட்டியில் முதல் 50 ஓவர்கள் பீல்டிங் செய்தார்.

அடுத்து இரண்டவது இன்னிங்கில் அவர் பேட்டிங்கில் 40 வது ஓவரில் அதாவது அந்த ஆட்டத்தின் 90 வது ஓவரில் விளையாடினார். இது விராட் கோலியின் உடல் தகுதியை காட்டுகிறது. மேலும் அவர் இந்த மாதிரியான நேரங்களில் வேறொரு கிரக வாசியை போல இருக்கிறார்.

மேலும் பேசிய வாசிம் அக்ரம் விராட் கோலி சதம் அடித்தது குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் “வீராட் கோலி சதம் அடிக்க வாய்ப்பு இருந்தால் அவர் அதனை அடிப்பதில் எந்த பிரச்னையும் கிடையாது. இந்திய அணி பொதுவாக பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்களை மிகவும் சுலபமாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். விராட் கோலி காலத்தில் இறங்கியதுமே தொடக்கத்தில் இருந்தே மிகச் சிறப்பான விளையாடினார் என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை