இப்ப இது தேவையா.. ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட வலி அது – வெளுத்து வாங்கிய வாசிம் அக்ரம்.

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது.

இப்படி இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் உற்றுநோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் இந்த போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போட்டி முடிந்ததும் விராட் கோலியுடம் இரண்டு செர்சிகளை பெற்றார். இதற்க்கு ரசிர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தாலும் சில ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். குறிப்பாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில் ” விராட் கோலியிடம் இருந்து பாபர் இரண்டு சட்டைகளைப் பெறுவதை என்னால் பார்க்க முடிகிறது, எல்லோரும் இந்த கிளிப்பை மீண்டும் மீண்டும் சோசியல் மீடியவில் காட்டுகிறார்கள். மேலும் அது பெருமளவு வைரலாகியும் வருகிறது. ஆனால் உங்களுடைய இந்த விளையாட்டிற்கு பிறகு ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பிறகு இது தேவையா? இது தனிப்பட்ட விஷயமாக இருக்க வேண்டும், திறந்த மைதானத்தில் செய்யக்கூடாது.

நான் படத்தைப் பார்த்தபோது அதைத்தான் சொன்னேன்.உங்கள் மாமாவின் மகன் உங்களிடம் கோலியின் சட்டையைப் பெறச் சொன்னால் அதனை நீங்கள் டிரஸ்ஸிங் ரூமில் சென்று பெற்றிருக்கலாம் ஆனால் அதனை இப்படி திறந்தவெளியில் செய்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது, அது மீண்டும் மீண்டும் ரசிகர்களை காயப்படுத்தும் என்றும் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் வாசம் அக்ரம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை