மைதானம் காலியாக இருப்பதாக சொல்வது அர்த்தமற்றது – கிண்டலடித்தவர்களுக்கு பாக் வீரர்கள் பதிலடி.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை 2023 தொடரானது இன்று அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவின் மிகவும் அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் தொடங்கியது. இந்த போட்டியானது மதியம் 2.30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிரா
அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக் கோப்பை 2023 தொடரானது இன்று அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவின் மிகவும் அழகான கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத்தனத்தில் தொடங்கியது. இந்த போட்டியானது மதியம் 2.30 மணிக்கு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணியானது மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியானது பந்துவீசிய தேர்வு செய்தது.
மேலும் அற்புதமாக விளையாடிய நியூசிலாந்து அணியானது வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியானது மோதி வருகின்றனர். ஆனால் முன்னதாக 2023 உலக கோப்பையின் முதல் போட்டி நடைபெற்ற போது நாரேந்திர மோடி மைத்தனத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.
குறிப்பாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணியின் வெளிநாட்டு ரசிகர்கள் பெரிதாக வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. மேலும் மைதானத்தின் இருக்கைகளும் சில தேசமடைந்தது போன்று பல புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி இருந்தது. இதனால் தான் பலரும் மைதானத்திற்கு வர மறுகின்றனர் என பலரும் விமர்சனம் செய்த்தனர்.
இந்நிலையில் உலக கோப்பை 2023 முதல் போட்டிக்கு ரசிகர்கள் வராதது ஏன் என்று செய்தியாளர் வாசிம் அக்ரமிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்த அவர் இந்தியாவிற்கு சாதகமாக ஒரு கருத்தை கூறினார் “அகமதாபாத் கூட்டத்தைப் பற்றி பேசுவது தேவையற்றது. ஏனெனில் ஒரு லட்சத்து எழுபதாயிரம் ரசிகர்கள் அமரக்கூடிய மைதானத்தில் 40000 ரசிகர்கள் இருந்தால் ரசிகர்கள் இல்லாமல் காலியாக இருப்பது போலவே தோன்றும் என்றார்.
மேலும் மேலும் அதே நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் “இதுவே கராச்சி மைதானமாக இருந்தால் இதே 40,000 ரசிகர்களால் நிரம்பி இருக்கும், ஏனென்றால் அந்த மைத்தனத்தின் கொள்ளளவு அவளவுதான் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை கூறியிருந்தார் சோயப் மாலிக்.