ஜடேஜாவும் கிடையாது, ருதுராஜும் கிடையாது. தோனிக்கு பிறகு CSKவிற்கு இவர்தான் சரியான கேப்டன் – வாசிம் அக்ரம்
உலகிலேயே மிகப்பெரிய டி20 கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கியதில் இன்று வரையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐபிஎல்லில் பல அணிகள் இருந்தாலும் சில அணிகள் மட்டுமே இன்றுவரையில் சிறப்பான அணியாக இருந்து வருகிறது. அந்த வகையில
உலகிலேயே மிகப்பெரிய டி20 கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கியதில் இன்று வரையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐபிஎல்லில் பல அணிகள் இருந்தாலும் சில அணிகள் மட்டுமே இன்றுவரையில் சிறப்பான அணியாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்களையும் நான்கு முறை கோப்பைகளையும் வென்று உள்ளது.
சென்னையில் இந்த வெற்றிக்கு பல வீரர்கள் காரணமாக இருந்தாலும் முக்கியமாக காரணமாக கருதப்படுபவர் தோனி. கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையில் சென்னை அணியின் கேப்டனாக இருந்து வந்துள்ளார் தோனி. இடையில் சில கேப்டன்கள் மாற்றப்பட்டாலும் சென்னையின் நிரந்தரமான கேப்டன் தோனி தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இருந்த போதிலும் தோனிக்கு தற்போது 41 வயது ஆகிறது.
அதோடு தோனி கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் போட்டியில் இருந்து வெளிவருவதற்கான அறிகுறிகளை கொடுத்து வருகிறார். இதனால் சென்னை அணியை அடுத்து யார் வழி நடத்த போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யாராக இருந்தால் சரியாக இருக்கும் என்று சமீபத்தில் நடந்த பெட்டியில் பேசியுள்ளார்.
வாசிம் அக்ரம் கூறியது :
அவர் கூறுகையில் “சிஎஸ்கே வின் கேப்டனாக ஜடேஜாவை கடந்த 2022ஆம் ஆண்டு நியமித்த போது அவரின் செயல் திறன் பாதிக்கப்பட்டதை நாம் அனைவரும் பார்த்தோம். அவர்கள் ஒருவேளை கேப்டனை மாற்ற வேண்டியது ரஹானேவை விட சிறந்த தேர்வை அவர்கள் பெற மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் நிலையானவராகவும் உள்ளூர் வீரராகவும் இருப்பார். அதே போல ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் உள்ளூர் வீரர்கள் அதிக வெற்றி பெறுவதை நாங்கள் பார்த்தோம்” என்று அக்ரம் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் “வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வீரர்களின் பெயர்கள் கூட நினைவில் இருக்காது. அப்படியிருக்க அவர்காலால் எப்படி CSK வை வழிநடத்த முடியும். ஒரு வேலை தோனி செல்வதாக இருந்தால் சென்னையை வழிநடத்த ரஹானே சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன். சிஎஸ்கே தனியாக ஒரு திட்டத்தை வைத்திருக்கலாம். ஆனால் ஒரு பெரிய அணியாக சரியான முடிவுகளை சோசித்து எடுக்க வேண்டியது முக்கியம்.
ரஹானேவின் கேப்டன்சி :
ஸ்டீபன் ஃப்ளெமிங் சென்னை அணியின் கலாச்சாரத்தை உள்ளேயும் வெளியேயும் அறிந்தவர். அதோடு வீரர்களை முழுமையாக நம்புபவர் என்று மேலும் கூறினார் வாசிம் அக்ரம். இவர் சொல்வது ஒரு விதத்தில் நியாயமானதுதான். ஏனென்றால் ரஹானே பல வருடம் கிரிக்கெட்டில் அனுபவம் கொண்டவர். ராஜஸ்தான் அணியை வழிநடத்தியிருக்கிறார், அதோடு இந்திய அணியில் விராட் இல்லாத போது அவருக்கு பதிலாக சிறப்பான கம்பேக் கொடுத்து 2020 – 21ல் பார்டர் கவாஸ்கர் போட்டியில் வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.