தேவையில்லாத பண்ணாதீங்க.. பின்னாடி வருத்தப்படுவீங்க – இந்திய அணிக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை.
நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்டது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியானது அப்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியாக உள்ளே வந்தது, மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இர
நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்டது. ஏனென்றால் பாகிஸ்தான் அணியானது அப்போது ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 அணியாக உள்ளே வந்தது, மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சானது மிகவும் சிறப்பாக இருந்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணியானது சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியிடம் தோற்று இறுதி போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இதனால் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கு இறுதி போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்தியா அசால்டாக இலங்கை அணியை 50 ரங்களுக்குள் சுருட்டி வரலாற்று சிறப்பவுமிக்க வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணியானது அடுத்தாக உலக கோப்பை 2023 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் அணியின் வீரரான வாசிம் கான் இந்திய அணியானது உலக கோப்பைக்கு முன்னதாக அதிக பணிச்சுமையை இந்திய அணிக்கு உருவாக்குகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் இது போன்ற தொடர்களில் விளையாடும் போது கடைசி நேரத்தில் முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறி வருத்தத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உருவாகும் என்று தெரிவிக்கும் அவர் கூறுகையில் “இந்த தொடருக்காக இந்திய அணி வெவ்வேறு மைதானங்களுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. அதில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவதற்காக பயணிப்பதற்கு மட்டும் ஒருநாள் தேவைப்படும்
ஆனால் இதுபோன்ற சமயங்களில் நீங்கள் உங்களுடைய சக்தியை முடிந்த அளவு உலகக் கோப்பைக்காக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை பயிற்சி வேண்டுமென்றால் இதை நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு செய்திருக்களாம். ஏனெனில் சொந்த மண்ணில் விளையாடும் நீங்கள் பெரிய தொடருக்கு முன்பாக களைப்படைந்து விடக்கூடாது. இந்த நிலையில் உங்களுக்கு மேலும் சில வீரர்கள் தேவைப்பட்டால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார் வாசிம் அகரம்.
இவர் கூறுவதில் ஒரு வகையில் சரி தான் ஏனென்றால் இந்த வருட உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய வெற்றியடைய அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்னும் சில தினங்களில் உலக கோப்பை தொடக்க இருக்கும் போது திடீரென இந்த தொடரில் முக்கிய வீரருக்கு காயம் ஏற்பட்டால் அது கண்டிப்பாக இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.