வாசிம் அக்ரம் கருத்துக்களை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது – முகமது ஷமியின் நக்கலான பேச்சு.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. 19ஆம் தேதி அன்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோட

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. 19ஆம் தேதி அன்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது . ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து 19 ஆம் தேதி அன்று இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வூட் தலா 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 137 ரன்களும் மார்னஸ் லாபுசாக்னே58 ரன்களும் மார்ஷ் 15 ரன்களையும் அடித்து ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி எளிதாக வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் பும்ரா 2 விக்கெட்டுகளையும் ஷமி 2 ஒரு விக்கெட்டையும் மட்டுமே வீழ்த்தி இருந்தன. எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது.

இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தோல்வியை தழுவியதை தாங்கி கொள்ள முடியாமல் ரசிகர்கள் பலர் அவர்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர். மேலும் உலகக்கோப்பை 2023- ல் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் முகமது சமி 24 விக்கட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தில் இருந்து வருகிறார். அவர் ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகளில் விளையாட வில்லை. இருப்பினும் அவர் திறமையாக பந்து வீசி எதிரணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். முகமது சமி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறுகையில் இந்திய அணிக்கு வித்தியாசமான பந்துகளை வழங்கி வருகிறது. என்று குற்றம்சாற்றியுள்ளார். அது குறித்து முகமது ஷமி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஷமி கூறியது:

WC 2015 க்கு முன்பு எனக்கு முழங்கால் வீக்கம் இருந்தது, எனக்கு 2 விருப்பங்கள் இருந்தன, ஒன்று நேரடியாக அறுவை சிகிச்சைக்கு செல்லலாம் அல்லது உலகக் கோப்பை விளையாடலாம், பின்னர் அறுவை சிகிச்சைக்கு செல்லலாம், அதே நேரத்தில் அணி ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் ஹோட்டலுக்குத் திரும்பும். நான் ஊசி போடுவேன், நீ நாட்டுக்காக விளையாடும் போது எல்லாவற்றையும் மறந்து விடுகிறாய். நான் 5 விக்கெட்டுகளை எடுத்தேன், பின்னர் 4 விக்கெட்டுகளை எடுத்தேன், மீண்டும் 5 விக்கெட்டுகளை எடுத்தேன், மேலும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை – வாசிம் பாய் நன்றாக விளக்கிய பிறகும் நாங்கள் வித்தியாசமான பந்துகளைப் பயன்படுத்துகிறோம் என்று அவர்கள் சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் – நான் அவர்களைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை