பாபர் அசாம் கருத்திற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் – என்ன சொன்னார்கள் தெரியுமா?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நாளை உடனே லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில் நேற்று பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நாளை உடனே லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில் நேற்று பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கும் வாழ்வா சாவா போட்டியாக இருந்தது. குறிப்பாக பாகிஸ்தான் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் துரதிஷ்ட வசமாக முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அப்போதே பாகிஸ்தான் இந்த உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறி விட்டதால் போட்டியானது சுவாரசியம் இல்லாமல் சென்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலந்து அணி 50 அவர்கள் முடிவு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 337 ரன்களை எடுத்து இருந்தது.

இதனையடுத்து 338 இடங்களில் இலக்காகக் கொண்ட களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 43.3 அவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 244 ரன்களில் தோல்வியை தழுவியது. மேலும் பாகிஸ்தான் அணியானது உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறிய நிலை கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாபர் அசாம் ஒரு தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “டிவியில் அறிவுரை வழங்குவது எளிது. உலகக் கோப்பையில் நான் செய்ய வேண்டிய விதத்தில் நான் இந்த தொடரில் செயல்படவில்லை, அதனால்தான் நான் அழுத்தத்தில் இருக்கிறேன் என்று மக்கள் கூறுகிறார்கள், நான் எந்த அழுத்தத்திலும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் கண்ணோட்டத்தில் ஒரு எண்ணம் இருக்கும். ஒவ்வொருவரும் வித்தியாசமாக சொல்கிறார்கள். அவர் இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும். என்று பாபர் அசாம் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் அதற்கு பதிலடி கொடுத்து பேசியுள்ளனர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான அப்ரிடி மற்றும் வாசிம் அகரம். அப்ரிடி கூறுகையில் “இந்த பதில் தேவையில்லாத ஓன்று என நான் நினைக்கிறேன். உங்களுடைய முழு கவனமும் போட்டியில் விளையாடி வெற்றி பெறுவதில் மட்டுமே இருக்க வேண்டும். எனவே அவர்கள் அப்படி குறாதா படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார் அப்ரிடி.

மேலும் பாபர் அசாம் கருத்திற்கு பதில் கூறிய வாசிம் அகரம் கூறுகையில் “நீங்கள் சரியாக செய்கிறீர்கள் என்றால் அனைத்தும் சரியாக செல்லும். ஆனால் நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் மக்களுக்கும் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். மேலும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படாமல் இருக்க வேண்டிய மனவுறுதி உங்களுக்கு வேண்டும் என்று கூறினார் அக்ரம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை