இது சரியான முடிவு கிடையாது. தோனி டீம்ல இருக்குறது ருதுராஜூக்கு தான் கஷ்டமா இருக்கும் – முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் பேச்சு

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா இன்று தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வெ

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா இன்று தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் சென்னை அணியின் ரசிகர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி என்ன வென்றால் சென்னை அணியின் கேப்டனாக தோனி தாமாக விலகி ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அந்த பதவியை அவர் வழங்கி விட்டார்.

ஐபிஎல் பொறுத்தவரை இது நடைபெற்ற சீசன்களில் இரண்டு முறை தவிர்த்து பெரும்பாலான சீசன்களில் சென்னை அணியை பிளே ஆப்பிற்கு கொண்டு சென்றுள்ளார். அதில் ஐந்து முறை கோப்பையையும் 5 முறை இரண்டாவது இடத்தையும் தக்கவைத்து கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் CLT கோப்பையையையும் இரண்டு முறை பெற்று கேப்டன்சியில் தனது திறமையை நிருப்பித்துள்ளர். அவர் கேப்டன்சியில் எப்போதும் கூலாக இருப்பதால் அனைவரும் அவரை கேப்டன் கூல் என்றும் அழைப்பார்கள்.

இந்த வருடம் ஐபிஎல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமான செய்தி என்னவென்றால் இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் தோனி ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகிய மூவரில் ஒருவர் ஒரு அணிக்கு கேப்டன்சியில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த மூன்று வீரர்களும் இந்த தொடரில் வெறும் வீரர்களாக மட்டுமே விளையாட உள்ளனர். தோனி தனது கேப்டன்சி பதவியை சென்னை அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டன்சியில் அமர்த்தியுள்ளார்.

தோனி கடைசி ஐபிஎல் போட்டியில் கோப்பை வென்று வெற்றி கேப்டனாக தந்து கேப்டன்சி பதவியை துறந்துள்ளார். அவர் கடந்த வருடமே காலில் காயத்துடன் தான் பேட்டிங் செய்து வந்தார். தோனி தற்போது கேப்டன்சியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு எமற்றதைய அளித்துள்ளது. இதுவே தோனியின் கடைசி வருடம் என்பதால் கேப்டன்சி மாற்றியதை அனைவாரும் சரியான முடிவு என கூறி வந்த நிலையில் அது சரியான முடிவு இல்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்து இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் , இது சரியான முடிவு இல்லை.நான் அப்படி நினைக்கவில்லை. எம்.எஸ். தோனி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் பலன் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஓய்வு பெற்றுவிட்டார், அவர் அருகில் இல்லை. இது எந்த கேப்டனின் வாழ்க்கையையும் எளிதாக்கியிருக்கும். இப்போது, ​​எம்.எஸ். தோனி அருகில் இருப்பதால், எந்த கேப்டனுக்கும் வேலையை மிகவும் கடினமாக்குகிறது. தோனி ஒப்புக்கொள்ளாத முடிவுகளை கெய்க்வாட் எடுப்பது கடினமாக இருக்கும் என்று ஜாஃபர் விளக்கினார்.

இதனால் தோனி இல்லாமல் ருதுராஜ் கெய்க்வாட் வேலையை மிகவும் எளிதாக்கியிருப்பார். அவர் எந்த முடிவை எடுத்தாலும், தோனி அதற்கு சம்மதிக்கிறாரா இல்லையா. அந்த முடிவுகளை அவர் விரும்பினாலும் சரி, நீங்கள் சொந்தமாக இருக்கிறீர்கள், ருதுராஜ் கெய்க்வாட் வாரிசாக இருந்திருப்பார் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் தோனி இல்லாதிருந்தால் நான் நினைக்கிறேன். இது இன்னும் எளிதாக்கியிருக்கும்” என்று ஜாஃபர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை