அவருக்கு பயமே இல்ல..ஏதோ கிளப் கேம்ஸ் போல விளையாடுகிறார் – இந்தியாவின் இளம் வீரரை பாராட்டிய வாசிம் ஜாபர்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. சுப்மன் கில் இஷான் கிஷான் தொடக்கத்திலேயே சொதப்ப பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டாமல் ஆட்டமிழந்தார். பி
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. சுப்மன் கில் இஷான் கிஷான் தொடக்கத்திலேயே சொதப்ப பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டாமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா கொஞ்சம் போட்டியை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் ஆட்டமிழக்க பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா 22 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். பொதுவாக தன்னுடை முதல் போட்டி என்றால் பொறுமையாக ஆடி பின்னர் ரன்களை சேர்ப்பார் மத்தியில் தொடக்கத்திலேயே அதிரடியாக ஆட ஆரம்பித்த திலக் வர்மா தன்னுடைய 2 பந்திலேயே சிக்ஸர் விளாசினார்.
மேலும் அதற்கு அடுத்த பந்தும் சிக்ஸர் விளையாசிய அவர் பந்துவீச்சாளரை குழப்பி 4வது பந்தை அடிக்காமல் விட்டுவிட்டார்.இதனால் தன்னால் அதிரடியாகவும் அதே சமயம் பொறுமையாகவும் ஆடமுடியும் என்பதை திலக் வர்மா இதன் மூலம் நிரூபித்துள்ளார். இந்நிலையில் தான் திலக் வர்மாவின் இந்த ஆட்டம் குறித்து பேசியுள்ளார் வாசிம் ஜபார்.
அவர் கூறுகையில் “திலக் வர்மா மியாகவும் அற்புதமாக விளையாடுகிறார். அவருக்கு எந்த விதமான அழுத்தமும் இல்லை, அதனால் தான் அவரால் எதோ அவர் சுவாரசியமாக பார்த்தார். நஒரு கிளப் விளையாட்டை அல்லது அவரது மாநில அணிக்காக விளையாடுவது போல் தோன்றியது. எந்த அழுத்தமும் கிடையாது அவரிடம். அவர் தன்னுடைய ஆட்டத்தை அந்த போட்டியின் மூலம் மேலும் மேம்படுத்தினார். அது அவருக்கும் மிகவும் நல்ல விஷயம்.
அவர் தன்னுடைய மனதளவில் மிகவும் வலிமையானவர் என்பதைக் காட்டுகிறது அந்த விஷயமே காட்டுகிறது. அவர் மட்டுமே இந்த ஆடுகளத்தில் மிகவும் எளிமையாக ஆடுவது போல தெரிந்தார். அவர் ஆடிய ஷாட்கள், பெரிய ஷாட்கள் மட்டுமல்ல, தேர்ட் மேன் நோக்கி அடித்த மற்ற ஷாட்களும் அவர் நல்ல ஃபார்மில் இருந்ததைக் காட்டுகிறது. அவரால் பெரிய ரன்களை அடிக்க முடியாததால் அவர் ஏமாற்றமடைந்தார். ஒருவேளை திலக் வர்மா 50 அலல்து 60 ரன்களை அடித்திருந்தால் இந்தியா வெற்றிபெற்றிருக்கும். அதே நேரத்தில் சஞ்சு சாம்சனின் ரன் அவுட்டும் பெரிய பிரச்னையாக மாறியது.
மேலும் பேசிய ஆவர் இஷான் கிஷான் குறித்தும் கூறினார். அவர் பேசுகையில் “டி20 போட்டிகளில் இஷான் கிஷனின் பார்ம் கொஞ்சம் கேள்விக்குறிதான். அவர் கடந்த 15 போட்டிகளில் 40 ரன்களுக்கு மேலே எடுக்கவில்லை. ஸ்ட்ரைக் ரேட்டும் மோசம். அந்த விஷயத்தை கொஞ்சம் நிர்வாகம் பார்க்க வேண்டும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான பார்மில் இருக்கிறார், ஐபிஎல் போட்டியில் சில சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்திய அவர் ஒரு தேர்வாக இருப்பார் என்றார் வாசிம் ஜாபர்.