இவர் இப்படி விளையாடியது இந்தியாவுக்கு மிகப்பெரிய பிளஸ் – முன்னாள் வீரர்கள் பாராட்டு.

ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொ

By ·

ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இந்நிலையில் அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து பலமான பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை விளாசி 266 என்ற ஒரு தாக்குப்பிடிக்க கூடிய ஸ்கோருக்கு கொண்டுவந்தனர். ஆனால் அதற்கு பிறகு மழை காரணமாக இரண்டவது இன்னிங்ஸ் நடக்காமல் போனது. இப்படிபட்ட நிலையில் தான் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் இந்த பொறுப்பான ஆட்டம் குறித்து பேசியுள்ளனர் முன்னாள் வீரர்கள்.

வாசிம் ஜாபர் பேசுகையில் “ஹர்திக் பாண்டியா அழுத்தத்தின் கீழ் ஒரு பொறுப்பான நாக் விளையாடினார். அவர் மிகவும் உறுதியுடன் காணப்பட்டார் மற்றும் சரளமாக திரும்பினார். பந்து நன்றாக பேட்டில் வரும் போது ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடுகிறார் என்று நான் உணர்கிறேன். அவர் வேகத்தை விரும்புகிறார் மற்றும் அவர் வேகப்பந்து வீச்சாளர்களை விளையாடிய விதம் போட்டியில் தெளிவாகத் தெரிந்தது. அவர் வேகத்தை நன்றாகப் பயன்படுத்தினார் மற்றும் ஹரிஸ் ரவுஃபுக்கு எதிராக சில நல்ல ஸ்ட்ரோக்குகளை விளையாடினார்.

ஒட்டுமொத்தமாக, இது மிகவும் அனுபவம் மிக்க ஆட்டம். ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து, அந்த கட்டத்தில் அந்த பார்ட்னர்ஷிப்பில் இடம்பெற்றது பெரிய விஷயம். அந்த பார்ட்னர்ஷிப்பின் காரணமாக இந்தியா ஒரு கெளரவமான ரன்களை எடுத்தது. ஹர்திக் பாண்டியா அப்படி விளையாடினால், இந்தியாவுக்கு ஒரு பெரிய லாபம் என்றே சொல்லலாம். அவர் இந்த முறையில் விளையாடுவதோடு சில ஓவர்களையும் வீசினால், அது இந்தியாவுக்கு ஒரு பெரிய பிளஸ் என்றார் ஜாஃபர்.

மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய ராபின் உத்தப்பா கூறுகையில் “அவர் பேட் செய்த விதம் மற்றும் அவர் காட்டிய கட்டுப்பாடு, அவரது ஷாட் எக்ஸிகியூஷன் பார்ப்பதற்கு நம்பமுடியாததாக இருந்தது. அபாரமான பேட்டிங்கை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தினார். அவர் ஸ்லாக்கிங் செய்வது போல் ஒரு ஷாட் கூட இல்லை. அவை அனைத்தும் சுத்தமான ஷாட்டுகளாக இருந்தன என்றார் ராபின் உத்தப்பா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை