வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த நிலைக்கு காரணம் அதுதான் – விளக்கம் கூறிய வாசிம் ஜாபர்.
இந்த வருடம் நடக்கும் உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெளியேறி இருக்கிறது. இந்நிலையில் இந்த பெரும் வரலாறு காணாத தோல்வியில் இருந்து திரும்பி வர வெஸ்ட் இண்டீஸ் அணியானது போராடி வருகிறது. அதன் முதல் முயற்சியாக இந்தியாவுடன் பல போட்டிகள்
இந்த வருடம் நடக்கும் உலக கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக வெளியேறி இருக்கிறது. இந்நிலையில் இந்த பெரும் வரலாறு காணாத தோல்வியில் இருந்து திரும்பி வர வெஸ்ட் இண்டீஸ் அணியானது போராடி வருகிறது. அதன் முதல் முயற்சியாக இந்தியாவுடன் பல போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டெஸ்ட் போட்டியில் கிடைத்த பெரும் தோல்விக்கு பிறகு ஒருநாள் போட்டியிலாவது வென்று விடவேண்டும் என்ற எண்ணத்தில் அணியை பலமாக தயார் செய்த்தது வெஸ்ட் இண்டீஸ். குறிப்பாக 2 வருடங்கள் கழித்து அவர்களின் அதிரடி வீரரான கையில் மேயர்ஸை களத்தில் இருக்கிறது. இவர் ஐபிஎல் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் டி20 போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் இந்தியாவிற்கு எதிராக நடந்த இந்த போட்டியில் கையில் மேயர்ஸ் வரும் 11(19) ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பல அதிரடி வீரர்கள் ரன்கள் எதுவும் எடுக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். சொல்லப்போனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் மட்டுமே கொஞ்சம் நேரம் தாக்குபிடித்து 43(45) ரன்களை விளாசினார்.
இதனால் வெஸ்ட் இன்டஸ் அணியானது தோல்வியை தழுவியது. இந்நிலையில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத அணியாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது ஆட்டம் காட்டுள்ளது குறித்து பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தான் இந்திய அணியின் முன்னல் வீரரான வாசிம் ஜாபர் இந்த தோல்வி குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “வெஸ்ட் இண்டீஸ் அணியால் தங்களுடைய வழக்கமான ஆத்தி வெளிப்படுத்தக முடியவில்லை, இது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஒருநாள் போட்டிகளில் அவர்களுக்கு இருந்த பிரச்சனைகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருந்தது. நான் மைதானம் சரியாக இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் சில சில நேரங்களில் வேகம் குறைவாகவும் சில இடங்களில் வேகம் அதிகமாகவும் இருந்தது.
இந்த காரணத்தினால் தான் அவர்களினால் சிறபாப்கா செயல்பட்டு ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் தேர்வாக முடியவில்லை என்று நான் நினைக்கிறேன். உண்மையில் முன்பு இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போது இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. அவர்கள் தங்களை எதிர்த்து போராடிய அணிகளுக்கு கண்டிப்பாக பாராட்டை தெரிவிக்க வேண்டும் என்றார் வாசிம் ஜாபர்.