ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு பிறகு இவர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம் – தமிழ் நாட்டு வீரருக்கு வாசிம் ஜாபர் ஆதரவு.

உலக கிரிக்கெட்டில் இந்தியா சிறந்த அணியாக இருந்தாலும் 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவினால் வெல்ல முடியவில்லை. என்னதான் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவுவது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய அணியின் பல வீரர

By ·

உலக கிரிக்கெட்டில் இந்தியா சிறந்த அணியாக இருந்தாலும் 2013ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஐசிசி கோப்பைகளையும் இந்தியாவினால் வெல்ல முடியவில்லை. என்னதான் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடினாலும் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவுவது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய அணியின் பல வீரர்களுக்கே புரியாத புதிராக இருக்கிறது. குறிப்பாக அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிவரும் வீரர்கள் அந்த போட்டியில் மட்டும் சொதப்பி விடுகின்றனர்.

குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நிசிலாந்து அணியை இந்தியா பந்துவீச்சில் சமாளித்து விட்டாலும் பேட்டிங்கில் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பெரும் தோல்வியை தழுவியது. சொல்லப்போனால் இந்தியாவின் தூண்களாக இருந்த விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் ட்ராவிட் என மூன்று பேருமே வெறும் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

மேலும் தோனி மிகவும் அதிசயமான முறையில் ரன் அவுட் ஆகினார். அதனையடுத்து கடந்த 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், முகமது ஷமி போன்ற சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. மேலும் இதனையெல்லாம் சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியானது முடிவுக்கு கொண்டுவரும் என்றிருந்த நிலையில் இந்த போட்டியிலும் சொதப்பினர்.

குறிப்பாக டெஸ்ட் போட்டியில்’ஜாம்பவான்கள் என்று கொண்டாடப்படும் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு காரணமானது. இதனால் அவர்களுக்கு பதிலாக வரும் காலங்களில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே நிறைய இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் தான் எதிர்கால இந்திய அணியை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை உருவாக்கி வருகிறது பிசிசிஐ.

இப்படிப்பட்ட நிலையில் தான் வாசிம் கான் ஐபிஎல் மற்றும் சமீபத்திய போட்டியில் களமிய இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறியுள்ளார் வாசிம் ஜாபர். அவர் கூறியதாவது “ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளார் அதனால் அவரை தேர்ந்தெடுக்கலாம். 2வது வீரராக நான் சுப்மன் கில்லை எடுப்பேன்.

பேட்டிங் துறையைப் பற்றி நாம் பேசும் போது இந்த இருவரும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு பின் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் திறமை கொண்ட வலுவான வீரர்கள். அதே போல சாய் சுதர்சன் நான் விரும்பும் மற்றொரு வீரர். கடந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரா தொடரில் சதமடித்தார். எனவே அவரும் வருங்காலத்தில் நல்ல வீரராக உருவெடுப்பார் என்று கூறினார் வாசிம் ஜாபர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை