மேஜிக் நிகழ்த்தியும் யுஸ்வேந்திர சாஹலுக்கு 4வது ஓவர் கொடுக்காதது ஏன் – வாசிம் ஜாபர் அதிர்ச்சி.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் க
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2வது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
ஆனால் இரண்டவது போட்டியில் போது இந்தியா வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு வந்தது. அதாவது இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் ஆச்சரியமடைந்துள்ளார். போட்டியின் 16வது ஓவரில், லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி. அதுவும் ஒரு இக்கட்டான நிலைமையில் வீழ்த்தினார். மேலும் மூன்றாவது விக்கெட்டும் lBW அவுட் கொடுத்த நிலையில் அது நாட் அவட் ஆனது.
இதன் மூலம் போட்டியின் வேகத்தை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றினார். அதன் பிறகு வெற்றி பெற இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்டன. ஆனால் பாண்டியா சாஹலை மீண்டும் தாக்குதலுக்கு கொண்டு வரவில்லை. இந்நிலையில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்தத. சொல்லப்போனால் சாஹல் வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் மேலும் போட்டியை திசை திருப்பிய நிலையில் அவருக்கு 4 வது ஓவர் கொடுக்காதது குறித்து பேசியுள்ளார் வாசிம் ஜாபர்.
அவர் கூறுகையில் “மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, குறிப்பாக சாஹல் தனது நான்காவது ஓவரை வீச வரவில்லை, அதே போல அக்சர் படேல் கூட அந்த காலகட்டத்தில் பந்து வீசவில்லை. எனக்கு அது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது. அவர் 18 வது ஓவரை வீசுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் வீசவில்லை, அவர் குறைந்தபட்சம் 19 வது ஓவரையாவது வீசியிருக்க வேண்டும் என்றார் வாசிம் என்று ஜாபர்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பூரன் குறித்தும் பேசிய அவர் “சந்தேகமே கிடையாது பூரனுக்கு தற்போது இருக்கும் நம்பிக்கை மற்றும் பார்ம் பொருத்தவரையில், தற்போது உள்ள சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார் என்றார் வாசிம் ஜாபர்.
குறிப்பிடத்தக்க வகையில் நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், அதற்கு பிறகு அமெரிக்காவில் நடந்த மேஜர் பிரிமியர் லீக் போட்டியிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார். மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள டி20 தொடரிலும் பூரன் 40 பந்துகளில் 67 ரன்களை விளாசியுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது தற்போதுள்ள பேட்ஸ்மேன்களில் நிகோலஸ் பூரன் சிறந்த ஒருவராக இருக்கிறார் என்கின்றனர் நெட்டிசன்கள்.