CSK வில் இருந்து தோனி வெளியேறினால், சென்னை அணி குவாலிபயரே திணறும் – வாசிம் ஜாபர்
எம்.எஸ்.தோனி உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். இவரை போல ஒரு கேப்டன் 100 வருடங்களுக்கு ஓரு முறை மட்டுமே தோன்றுவார்கள் என்று கூறியவர் பலர் இருக்கின்றனர். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது. அதுமட்டுமல
எம்.எஸ்.தோனி உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். இவரை போல ஒரு கேப்டன் 100 வருடங்களுக்கு ஓரு முறை மட்டுமே தோன்றுவார்கள் என்று கூறியவர் பலர் இருக்கின்றனர். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி 5 கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார்.
இதனையடையே இன்று தோனிக்கு 42 வயதாகிறது ஏற்கனவே பல பேட்ஸ்மேன்கள் வயதின் காரணமாக ஓய்வு பெற்ற நிலையில் தோனி இன்னமும் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதனிடையே இந்த வருட ஐபிஎல் போட்டியில் தோனி மூலங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் தோனி இந்த சீசனில் கோப்பையை வாங்கி கொடுத்துவிட்டு முற்றிலுமாக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஐபிஎல் 2023 :
ஆனாலும் ஐபிஎல் இறுதி போட்டியில் தோனியை காண அளவுகடந்த ரசிகர் கூட்டம் அலைமோதியது. ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஒரு போட்டிக்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட 2 நாட்கள் பொறுத்திருந்தது பின்னர் சென்னை அணி வெற்றி பெற்றது. இது அந்த போட்டிக்காக மழை என்றும் பாராமல் 48 மணிநேரங்களுக்கு மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்க அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் மீண்டும் அடுத்த சீசன் விளையாடுவேன் என்று தோனி கூறினார்.இந்நிலையில் பிரபல செய்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த வாசிம் ஜாபர் தோனி பற்றியும் சென்னை அணி பற்றியும் பேசியிருந்தார்
வாசிம் ஜாபர் பேட்டி :
அவர் கூறுகையில் “சென்னை அணியின் வெற்றி என்பது தோனியுடன் பொருத்தி இருக்கிறது. ஒரு வேளை தோனி CSKவில் இருந்து வெளியேறியால் சென்னை அணி இப்போது இருந்ததை போன்று இருக்காது என்பதை கண்டிப்பாக சொல்லலாம். ஏனென்றால் அப்படியொரு அணியை வைத்துக்கொண்டு ஐபிஎல் போட்டியில் கோப்பைகளை வெல்வது என்பது சாதாரண காரியம் கிடையாது. அதனை தோனியால் மட்டுமே செய்ய முடியும்.
ஏனெனில் சென்னை அணியின் இந்த வருடமும் குறைவான வீரர்களே இருந்தார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அவர்களது பந்துவீச்சை கூறலாம். சென்னை அணியின் துஷார் தேஷ்பாண்டே கடந்த ஐபிஎல் போட்டிங்களில் ஆடியிருக்கிறார் ஆனால் வென்றிகரமாக இருக்க முடியவில்லை. மதீஷா பதிரான புதியவர், ஆகாஷ் சிங் தொடக்க போட்டிங்களில் விளையாடினார், தீபக் சாஹர் இந்த ஐபிஎல்லில் பாதி போட்டிகளை காயம் காரணமாக விளையாடவே இல்லை.
மதிஷா பதிரானவும் ஐபிஎல் போட்டிகளில் அந்த அளவிற்கு பெயர் இல்லை, மெயின் அலி விளையாடவே இல்லை, ஜடேஜா எப்போதும் போல இருந்தார். இப்படி இந்த மாதிரியான ஒரு பந்துவீச்சை வைத்துக்கொண்டு ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற வைப்பது தோனியால் மட்டுமே முடியும். அவருக்கு எப்படி குறைவான வீரர்கள் இருப்பை வைத்துக்கொண்டு அதில் எப்படி சிறந்து விளங்குவது என்று காட்டுவார். அப்படி எம்.எஸ்.தோனியை எடுத்துவிட்டால் சென்னை அணி குவாலிபயரே திணறும் என்றார் வாசிம் ஜாபர்.