இதை விட நல்ல மைதானம் உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது – இந்திய வீரர்களுக்கு வாசிம் ஜாபர் எச்சரிக்கை.
இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்ந
இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.
ஆனால் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மிகவும் மோசமாக விளையாடினார்கள். சொல்லபோனால் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கிய ஜெய்ஸ்வால் தனக்கு கிடைத்த டி20 போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அதே போல விக்கெட் கீப்பராக இருந்த சஞ்சு சாம்சனும் தன்னுடய திறமையை நிரூபிக்க வேண்டிய தருணம் இது.
இப்படிப்பட்ட நிலையில் தான் புளோரிடாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான நான்காவது டி 20 ஐ போட்டிக்கு முன், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர் வரவிருக்கும் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் குறித்தது தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் பேட்டிங் குறித்தும் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் ஆடுகளமாக இது இருக்க கூடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அவர் கூறுகையில் ” சஞ்சு சாம்சன் அங்கு சென்று சில ரன்கள் எடுக்க வேண்டும். இது அதிக ரன்கள் அடிக்கும் மைதானம், அங்கு பந்து பேடிற்கு வரும், எனவே அங்கு பேட்டிங் செய்வது சரியான விஷயமாக இருக்கும். அது அவராக இருந்தாலும் சரி, ஷுப்மான் கில் அல்லது ஜெய்ஸ்வாலாக இருந்தாலும் சரி, நீங்கள் மோசமான ஃபார்மில் இருந்தால் நீங்கள் பேட்டிங் செய்ய இதை விட சிறந்த ஆடுகளம் கிடைக்காது. எனவே அவர்கள் அதை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றார் ஜாபர்.
மேலும் பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் குறித்து பேசுகையில் “கேப்டன் பொறுப்பு அவருக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது போல் தெரிகிறது. நிக்கோலஸ் பூரனுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு பேட்ஸ்மேன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது என்றார்கள் அது ரோவ்மேன் பவல் தான். மேற்கிந்தியத் தீவுகளின் தனித்து நிற்கும் வீரராக நிக்கோலஸ் பூரனின் பங்கு கவனிக்கப்படாமல் போகவில்லை. ஜாஃபர், பூரனை முன்கூட்டியே ஆட்டமிழக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், அணி அவரது பேட்டிங் திறமையை பெரிதும் நம்பியுள்ளது
நிக்கோலஸ் பூரன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துருப்புச் சீட்டு. அவர்கள் பெரிய ஸ்கோரைப் பெறுவதற்கான வாய்ப்புகளுக்கு அவர் மிகவும் முக்கியமான ஒரு வீரர். ஏனென்றால் கேப்டன் ரோவ்மேன் பவலைத் தவிர மற்ற பேட்டர்களினால் பேட்டிங்கில் முன்னேற முடியவில்லை. எனவே அவர்களது அணி வெற்றியடைய வேண்டும் என்றால் அவர்கள் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றார் வாசிம் ஜாபர்.