இஷான் கிஷான் வேண்டாம்..ஐபிஎல் போட்டியில் கலக்குன அவருக்கு வாய்ப்பு கொடுங்க – வாசிம் ஜாபர் பரபரப்பு.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ​​பார்படாஸில் நடந்த முதல் ஆட்டத்தில் வென்ற பிறகு, கடைசி இரண்டு ஆட்டங்களில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு எடுத்துக்கொண்டதால், இந்தியா அணிக்கு அது ஒரு சோதனையாக இருந்தது. ஆகஸ்ட் 1 மற்றும் செவ்வாய்க் கிழமை டி

By ·

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, ​​பார்படாஸில் நடந்த முதல் ஆட்டத்தில் வென்ற பிறகு, கடைசி இரண்டு ஆட்டங்களில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு எடுத்துக்கொண்டதால், இந்தியா அணிக்கு அது ஒரு சோதனையாக இருந்தது. ஆகஸ்ட் 1 மற்றும் செவ்வாய்க் கிழமை டிரினிடாட்டில் நடந்த தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடினார்.

மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இஷான் கிஷான் முதல் போட்டியில் 52(46) ரன்களும், இரண்டாவது போட்டியில் 55(55) ரன்களும், மூன்றவது போட்டியில் 77(64) ரன்களையும் விளாசினார். இதனால் IND vs WI ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதையும் பெற்றார் இஷான் கிஷான். அதோடு வரும் உலக கோப்பை போட்டிக்கும் மற்றொரு விக்கெட் கீப்பர் தேவைப்படும் நிலையில் இஷான் கிஷான் அல்லது சஞ்சு சாம்சன் இருக்கின்றனர். ஆனால் இஷான் கிஷனுக்கே வரும் உலக கோபப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்தது. மேலும் வழக்கம் போல இஷான் கிஷனும் விளையாட சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா தோல்வியை சந்திதது. சொல்லப்போனால் இஷான் கிஷான் டி20 பாரமானது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஐபிஎல் போட்டியிலும் சிறப்பான பார்மில் இல்லாத அவர் தற்போது சர்வதேச போட்டியிலும் மோசமான பார்மை காட்டியுள்ளது பலரது விமர்சனத்திற்க்கு உள்ளகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “நான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவதை காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்.அவர் தொடக்க வீரகாக இந்தியாவிற்கு களமிறங்க வேண்டும். ஏனென்றால் இஷான் கிஷானின் டி20 பார்ம் என்னை கவலைக்கு உள்ளக்கியுள்ளது.

அவர் கடைசியாக விளையாடிய 15 இன்னிங்கில் அவரினால் 40 ரன்களுக்கு மேலே எடுக்கவே முடியவில்லை. அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் தான் நான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பரிந்துரை செய்கிறேன். இருந்த போதிலும் ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷான் சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் டி20 போட்டிகள் என்பது வேறு. அதோடு கடந்த ஐபிஎல் தொடரும் இஷான் கிஷனுக்கு மோசமாக இருந்தது என்றார் வாசிம் ஜாபர்.

இந்நிலையில் கடந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 14 போட்டிகளில் 625 ரன்களை விளாசினார். மேலும் 5 அரை சதங்கள் மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிராக சதம் என அற்புதம் படைத்த அவர் ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார். மேலும் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 150 ரன்களுக்கு மேலே எடுத்தது சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை