ஐபிஎல் வெற்றிக்கு பிறகு ஹோட்டலில் குத்தாட்டம் போட்ட தீபக் சஹார் – வீடியோ உள்ளே.

ஐபிஎல் 2023 இறுதியாக நேற்று மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற

By ·

ஐபிஎல் 2023 இறுதியாக நேற்று மே 29 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. மேலும் ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பைகளை வென்ற அணி என்ற சாதனையையும், 10 பைனல் சென்ற அணி என்ற சாதனையையும் சென்னை பெற்றது.

இந்நிலையில் அந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் சென்னை அணி வெற்றியை பதிவு செய்தவுடன் மைதானம் முழுவதும் கொண்டாட்டம் தொடங்கியது. இந்த வெற்றியின் கொண்டாட்டம் களத்தில் மட்டும் நின்றுவிடவில்லை. பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடக்க தொடங்கியது. மேலும் அது தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வரும் நிலையில் தான் தீபக் சாஹர் வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்குப் பிறகு தீபக் சஹார் போட்டிக்காக தங்கியிருக்கும் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வைரலான வீடியோ. இந்த வீடியோவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ரசிகர்கள் மேளம் அடித்து கொண்டாடி கொண்டிருக மாடியில் தீபக் சஹார் அவர்களுடன் சேர்ந்து VIPE செய்தார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் போட்டியை பற்றி பேசுகையில் பல தடைகளுக்கு பிறகு நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி முதலி களமிறங்கிய குஜராத் அணிக்கு அனைத்தும் சரியாக செல்ல சென்னை அணிக்கு மோசமான பந்துவீச்சாக மாறியது. இறுதியில் குஜராத் அணி 20வது ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்களை குவித்தது.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். 215 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே மழை குறுக்கீட்டு போட்டி நிருத்தி வைக்கப்பட்டது. இதனால் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் அணியின் கூட்டு முயற்சியால் சென்னை அணி இறுதி ஓவரில் அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெற்றது.

இதற்கு முக்கியமான காரணம் ஜடேஜா மற்றும் அணியின் கூட்டு முயற்சி தான். மேலும் வெற்றி பெற்றதும் சென்னை அணியின் கேப்டன் தோனி ஜடேஜாவை தூக்கி கொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார். அது ரசிகர்களுக்கு மனதை ஊருக்கும் காட்சியாகவும் ரசிகர்களுக்கு இருந்தது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை