நாங்கள் அடுத்து டி 20 உலகக்கோப்பை தயாராகி கொண்டு இருக்கின்றோம். மீண்டும் வருவோம் – எட்வர்ட்ஸ்.

உங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்ற முடிவடைகிறது. நேற்றைய கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியும் இந்திய அணியும் பலப்பரிட்சை செய்தது. இதில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மட

By ·

உங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்ற முடிவடைகிறது. நேற்றைய கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியும் இந்திய அணியும் பலப்பரிட்சை செய்தது. இதில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அடுத்த 15ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்கு தகுதி பெரும் என்ற நம்பிக்கையில் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து 410 ரண்களை குவித்து இருந்தனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் கில் இந்திய அணிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தந்தனர். சுப்மான் கில் 32 பந்துகளில் 51 ரன்கள் இருந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 61 ரன்கள் இருந்த நிலையில் அவர் மற்றும் வெளியேறினார். அதுபோல அதன் பிறகு வந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி நிதானமாக விளையாடி 56 பந்துகளில் 51 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு ரன்களை குவிக்க உதவினார்.

அதன் பின் வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அணிக்கு நல்ல பாட்டன்ஷிப் அமைத்து பெரிய இலக்கிற்கு உதவினர். 84 பந்துகளில் தனது உலகக்கோப்பை முதல் சதத்தை பூர்த்தி செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். அதன் பின்பு அதிரடியை காட்டதொடங்கிய கே.எல் ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார் 102 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 128ரன்களையும் குவித்து இருந்தார். எனவே இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 410 ரன்களை குவித்தனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் லீட் 2 விக்கெட்டுகளையும் மீக்ரம் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

411 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய நெதர்லாந்து அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடி இருந்தது. இருப்பினும் நெதலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக தேஜா நிடமானுரு 54 ரன்களும் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 45ரன்களும் கொலின் அக்கர்மேன் 35 ரன்களையும் அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் கோலி மற்றும் ரோஹித் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி நெதர்லாந்து அணியை 250ரன்னில் கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது. தோல்வி குறித்து பேசிய நெதர்லாந்து அணி கேப்டன் எட்வர்ட்ஸ் கூறுகையில்,

நாம் இருக்க விரும்பும் தருணத்தில் இது கொஞ்சம் தந்திரமான ஒன்று. நாங்கள் விளையாடும் பாணியில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். போட்டி எப்போதும் கடினமாக இருக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். அதனுடன் கற்றுக்கொள்ள விளையாடுவது. அவர்கள் அழுத்தத்தை உணர்ந்தோம். எங்கள் அணியில் இன்னும் நிறைய இளம் வீரர்கள் அணியில் வர உள்ளனர். இன்னும் நிறைய பயிற்சி முகாம்களை ஏற்படுத்த உள்ளோம். சில பயிற்சி முகாம்கள் வரவுள்ளன. என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை