எங்களால் மீண்டும் வலுவாக வர முடியும். எங்களால் இன்னும் அதை செய்ய முடியும் – ஷகிப் நம்பிக்கை
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 3 இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா அணியும் 7 இடத்தில பங்களாதேஷ் அணியும் நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் பங்களாதேஷ் அணி கடந
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 3 இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா அணியும் 7 இடத்தில பங்களாதேஷ் அணியும் நேற்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் பங்களாதேஷ் அணி கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறது.
தென்னாபிரிக்கா அணி நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து அணியை 229 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது அவர்களுக்கு பெரும் புத்துனர்ச்சியை அளித்துள்ளது. தென்னாபிரிக்கா அணிக்கு இன்னும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெரும் ஆனால் பங்களாதேஷ் அணி இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது.
அதன் படி களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு ஆரம்பத்தில் ஒரு விக்கெட்டை இழந்து இருந்தாலும் அதன் பின் நல்ல தொடக்கம் அமைந்தது. 5௦ ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 382 ரன்களை குவித்தது. இந்த மாபெரும் ரன்களுக்கு காரனமாக அமைந்தது டி காக் பேட்டிங் தான். தென்னாபிரிக்கா அணியில் அதிக பட்சமாக டி காக் 174 ரன்களை குவித்து இருந்தார். கடந்த போட்டியில் அற்புதமாக விளையாடி இருந்த க்ளாசென் இந்த போட்டியில் 9௦ ரன்களையும், மார்க்ரம் 6௦ ரன்களையும் குவித்தனர். பங்களாதேஷ் அணியின் சார்பாக ஹாசன் முஹம்மத் 2 விக்கெட்டுகளையும் மிராஸ், இஸ்லாம், ஷகிப் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
383 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பங்களாதேஷ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. பங்களாதேஷ் அணி பேட்டிங்கில் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பி வந்தது. தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பங்களாதேஷ் அணியின் அதிக பட்சமாக முகமதுல்லா 111ரன்களும் லிட்டன் தாஸ் 22 ரன்களும் நசும் ஹமத் 19 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. தென்னாபிரிக்கா அணியின் கோட்ஸி 3 விக்கெட்டுகளையும் ரபாடா, ஜான்சன்,வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் , மகாராஜ் 1 விக்கெட்டையும்வீழ்த்தி இருந்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து பங்களாதேஷ் கேப்டன் மனம் திறந்து பேசியுள்ளார்.
ஷகிப் அல் ஹசன்:
நாங்கள் 35 ஓவர்கள் நன்றாகப் பந்துவீசி சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம். அதன் பின் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். குறிப்பாக குயின்டன், அவர் நன்றாக பேட்டிங் செய்தார் மற்றும் கிளாசென் அதை முடித்த விதம். இப்படி ஒரு மைதானத்தில் அதுவும் நடக்கலாம். முஷ்பிக் மற்றும் மஹ்முத் ஆகியோர் வரிசையை உயர்த்துவது பற்றி சில பேசப்பட்டது. முதல் 5 இடத்தில் இருக்கும் வீரர்கள் ரன்களை அடிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களிடமிருந்து அதிக பலன் பெற முடியும். தற்போது இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் பட்டத்தை வெல்லலாம் எனத் தெரிகிறது. ஆனால் எதுவும் நடக்கலாம், நீண்ட தூரம் செல்ல வேண்டும். கற்றுக்கொள்ள நிறைய மற்றும் விளையாட நிறைய. நாங்கள் அரையிறுதியில் இல்லை என்றால் ஐந்து அல்லது ஆறு வரை முடிக்க விரும்புகிறோம். எங்களால் இன்னும் அதைச் செய்ய முடியும், நாங்கள் மீண்டும் வலுவாக வர முடியும் என்று நான் நம்புகிறேன்.”