இந்த வெற்றியை எங்களால் நம்ப முடியவில்லை – ஆஸ்திரேலியா அணியின் U19 கேப்டன் ஹக் வெய்ப்ஜென்

இந்திய அணியின் இளம் படை u19 உலகக்கோப்பையில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு,

By ·

இந்திய அணியின் இளம் படை u19 உலகக்கோப்பையில் விளையாடியது. அதில் முதல் போட்டியில் இருந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹக் வெய்ப்ஜென் இந்த வெற்றி நம்ப முடியாத வெற்றி என்று கூறியிருந்தார்.

இந்த இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது. ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி இருந்தாலும் அதன் பின் தங்களது ஆட்டத்தை காட்டி சிறப்பாக விளையாடி வந்தனர். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களை குவித்து இருந்து. அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து நிலையாக இருக்காமல் வந்த வேகத்திலே சென்றது. நான்கு வீரர்களை தவிற மற்ற எந்த ஒரு இந்திய வீரரும் இரண்டிலக்க ரன்களையும் அடிக்கவில்லை. கேப்டன் உதய் சஹாரன் 8 ரன்களை மட்டும் தான் அடித்து இருந்தார். இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் கோப்பையை நழுவ விடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஹக் வெய்ப்ஜென் கூறுகையில்

“இது நம்பமுடியாதது. இந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் குழுவைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த சில மாதங்களில் நிறைய வேலைகள் நடந்துள்ளன. போர்டில் 250 கிடைத்தால் நாங்கள் அதைப் பாதுகாப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. [ஆன். ஹர்ஜாஸ்] படிவம் தற்காலிகமானது, வகுப்பு நிரந்தரமானது.அவர் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்களுக்கு முழுப் புகழும் உண்டு.அவர் வேலையைச் செய்து முடிப்பார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு இருந்தது.

இந்தியா வெளிப்படையாக ஒரு வர்க்கப் பக்கம், அவர்கள் போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர், அவர்கள் தவறான பக்கத்தில் இருந்தனர். இன்று ஆனால் அவர்களுக்கு நிறைய வகுப்புகள் உள்ளன. [வேகப்பந்து வீச்சாளர்களில்] தனிப்பட்ட முறையில், ஒரு யூனிட்டாக அவர்கள் மிகவும் நன்றாக வேலை செய்கிறார்கள், அவர்கள் தங்கள் பாத்திரங்களை அறிந்திருக்கிறார்கள், அவர்கள் தங்கள் வேலைகளை அறிந்திருக்கிறார்கள்,

அவர்கள் நால்வருக்கும் தெரியாவிட்டால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன் வெகுதூரம் செல்லுங்கள். என்று கூறினார் கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் உலககோப்பையில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் கோப்பையை நழுவவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை