“மைத்தானத்தை குறை சொல்ல முடியாது” – தோல்விக்கு பிறகு பேசிய டேவிட் வார்னர்.
ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுளைந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே த
ஐபிஎல் 2023 க்கான 67 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. இதில் அற்புதமான வெற்றியை பதிவு செய்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுளைந்தது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கையே தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர்.
79 ரன்கள் இருந்த நிலையில் ருதுராஜ் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த டுபேவுடன் இணைந்த கான்வே அதிரடியை காட்ட தொடங்கினார். டுபே மற்றும் கான்வே அற்புதமாக விளையாடி டெல்லி அணியின் பௌலிங்கை சிதறடித்தனர்.9 பந்துகளில் 22 ரன்களை அடித்து வெளியேற, தல தோனி களமிறங்கினார். இந்நிலையில் கான்வே 87 ரன்களில் வெளியேறினார்.அதன் பின் வந்த ஜடேஜா 7 பந்துகளிலே 20 ரன்களை அடித்கார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை குவித்தது சென்னை அணி.
224 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே சொதப்பி வந்தது. ப்ரித்வி ஷா 5 ரன்களிலும் அதன் பின் வந்த சால்ட் 3 ரன்களில் வெளியேற ரூசோ ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். 6 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. சென்னை அணியின் பௌலிங்கை சமாளிக்க முடியமால் திணறி வர யாஷ் தூள் 13 ரன்களில் வெளியேறினார். வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியே வந்தனர்.
14 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. மற்றொரு புறம் தனி ஆளாக போராடி வந்தார் அணியின் கேப்டன் வார்னர். அமன் 7 ரன்களில் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். தனியாக போராடி வந்த வார்னர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். லலித் யாதவ் 6 ரன்களிலும் வெளியேற, குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
டேவிட் வார்னர் கூறியது :
சென்னை அணியே வெற்றிக்கு தகுதியான அணி என்று கூறலாம். இன்றைய போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தார்கள். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. இருந்தாலும் பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை. துவக்கத்திலேயே விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் பவுண்டரிகளை அடித்திருந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணியின் பவுலர்களுக்கு பிரஷர் இருந்திருக்கும்.
ஆனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்த போது பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலேயே இந்த மோசமான தோல்விக்கு காரணமாக ஆனது. எங்களின் தொடர்ந்து மைதானத்தை குறை சொல்ல முடியாது. நாங்கள் முன்னரே இதற்கு தயாராக இருந்திருக்க வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் குறைகளை சரி செய்து நிச்சயம் அடுத்த சீசனில் பலமாக மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவோம் என்றார் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர்.