நாங்க இன்னும் சிறப்பாக பந்துவீசி இருக்கலாம். நாங்க அந்த ஒரு இடத்துல தான் வேகத்தை இழந்துட்டோம் – கேப்டன் ஷிகர் தவான் பேச்சு

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதில் இன்றைய ஆறாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. பஞ்சாப் அணி இதற்கு முன்னதாக

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது அதில் இன்றைய ஆறாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் கிங்ஸ் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதின. பஞ்சாப் அணி இதற்கு முன்னதாக டெல்லி அணியிடம் வெற்றி பெற்றது, பெங்களூரு அணியதற்கு முன்பு சென்னை அணியிடம் தோல்வியை தழுவிய நேற்றைய போட்டியில் களமிறங்குகின்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரில் அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் பெங்களூரு அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதனை எதிர்கொள்ள பஞ்சாப் அணியின் வீரர்கள் சற்று திணறியே வந்தனர். அதன் பின் மிடில் ஆர்டரில் பெங்களூரு அணியின் பந்துவீச்சை பஞ்சாப் அணியின் வீரர்கள் நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர். எனவே பஞ்சாப் அணி ஆறு விக்கெட்டுகளை எழுந்து 176 ரன்கள் குறித்து இருந்தது.

அதில் பஞ்சாப் அணியின் அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்கள் ஜிதேஷ் ஷர்மா 27 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களையும் அடித்து இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் இரண்டும் விக்கெட்டுகளையும் யாஷ் தாயால் மற்றும் அல்சாரி ஜோசப் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். எனவே பஞ்சாப் அணி ஆறு விக்கெட்டுகளை எழுந்து 176 ரன்கள் குறித்து இருந்தது.

177 ரன்களை இலாகாக் கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பமே பெரிய அடியாக இருந்தது. கேப்டன் டு பிளசிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி அணிக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்து இருந்தார். அதன் பின் வந்த கிரின் 3 ரன்களிலும் ரஜத்படித்தார் 18 ரன்களிலும் மேக்ஸ்வெல் 3 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். யார் விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு பக்கம் நிதானமாக விளையாடிய விராட் கோலி 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்தால் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

தோல்வி குறித்து பஞ்சப் அணியின் கேப்டன் ஷிகர் தவன் கூறுகையில்,இது ஒரு நல்ல விளையாட்டு, நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம் என்று நினைக்கிறேன். முதல் ஆறு ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி இருக்க வேண்டும். நங்கள் கோலியின் கேட்ச்களை பிடிக்காமல் விட்டுவிட்டோம். நாங்கள் அந்த இடத்தில் வேகத்தை இழந்தோம், அது முக்கியமானது. இது ஒரு நல்ல விக்கெட் என்று தோன்றியது ஆனால் அது உண்மையல்ல. 70% நன்றாக வந்தது. நான் எனது ரன்களில் மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் முதல் சிக்சரில் வேகமாக விளையாடியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நாங்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தோம், அதுவும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. மொத்தமாக நாங்கள் நினைத்தோம். கடைசி ஓவர் வரை போட்டி நீடித்தது, இறுதியில் நாங்கள் சிறப்பாக பந்து வீசியிருக்கலாம். ஹர்ப்ரீத் மிகச் சிறப்பாக பந்துவீசுகிறார், அதுவும் ஒரு சிறிய மைதானத்தில் இடது கை வீரர்களுக்கு. அவர் அழுத்தத்தில் திளைத்தார் மற்றும் முன்னேற்றங்களைப் பெற்றார் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை