நாங்கள் அந்த இடத்தில் சரியாக செயல்படவில்லை அதுதான் எங்கள் தோல்விக்கு காரணம் – வேட்.
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்றுடன் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் உலக கோப்பை 2023 இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் தற்போது 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் இந்தியா அணி தற்போது விளையாடி வருகிறது. அதில் நேற்றுடன் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் இருந்த உலகக் கோப்பை பிறகு ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் களம் இறங்கி விளையாடினார்.
இருப்பினும் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக சூரியகுமார் யாதவர் தான் செயல்பட்டு வந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை தந்த நிலையில் 200 ரண்களுக்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆதிக்கத்தால் இந்திய அணியால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. எனவே இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது.
இந்திய அணி அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்களும் ஜெயஸ்வால் 37 ரன்களுக்கும் ருதுராஜ் கெய்க்வாட்32 ரன்களுக்கு மட்டும் எடுத்து வெளியேறினார். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிருந்து வெளியே அனுப்பி ஏமாற்றத்தை அளித்தார். உலக கோப்பை போட்டிக்குப் பிறகு அணிக்கு திரும்பிய ஷ்ரேயஸ் ஐயரும் பெரிதாக ஜொலிக்கவில்லை. எனவே இந்தியா 174 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் சங்கா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
175 ரன்கள் இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இந்திய அணி வீரர்களுக்கு சற்று பயத்தை தந்தது. இருப்பினும் இந்திய அணி இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக வேட் 36 ரன்களுக்கும் ஹெட் 31 ரன்களும் ஷார்ட் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி சார்பில் அக்சர் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டை இருந்தனர் எனவே இந்திய 20 ரன்களுக்கு வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி. தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் கூறுகையில்
நாங்கள் நடுவில் ஸ்பின் பந்துவீச்சாளர்களை நன்றாக விளையாடவில்லை, மேலும் சில விக்கெட்டுகளை இழந்தோம், அதனால் டிம் டேவிட்டிற்கு செய்ய வேண்டிய தேவை அதிகமாக இருந்தது. வரும் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர், துவர்ஷூயிஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டார், அவர்கள் நிஜமாகவே எழுந்து நின்றார்கள். உலகக் கோப்பை நெருங்கி வருவதால், அணியைச் சுற்றியுள்ள வீரர்களின் பேட்டிங் ஆழம் முக்கியமானது என்பதால், உள்ள வீரர்களைப் பற்றி தொடர்ந்து அறிய விரும்புகிறோம்.