“எங்கள் திறமைக்கு ஏற்றார் போல் எங்களால் விளையாட முடியவில்லை” இலங்கை அணியின் கேப்டன் குசல் மெண்டிஸ்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் ஒர
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 33வது போட்டியில் இந்திய அணியும் ஸ்ரீலங்கா அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இந்திய அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் ஒரு தோல்வியை கூட தழுவாமல் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது. இலங்கை அணி இதுவரை நடந்துள்ள 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
அதில் இரண்டு போட்டியில் வெற்றி கண்டுள்ளதில் ஒன்று இங்கிலாந்து அணி மற்றும் மற்றொன்று நெதர்லாந்து அணி.இந்த போட்டியில் மட்டும் அல்லாமல் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு செல்லமுடியும் என்று தீவிர பயிற்சியுடன் இன்றைய போட்டியில் கலந்து இறங்கினார்கள். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மெண்டிஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. முதல் பந்தில் ரோஹித் ஷர்மா போர் அவர்களின் சிறப்பான தொடக்கத்தை அளித்த நிலையில் அதற்க்கு பந்தில் அவர் ஆட்டம் இழந்து வெளியேற அதன் பின்பு நின்று நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மான் கில் மற்றும் விராட் கோலி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து ரன்களை குவித்து வந்தனர்.
92 ரண்களை நெருங்கிய நிலையில் சுப்மான் கில் மதுசங்க வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் மென்டீஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார். இந்தப் போட்டியில் விராட் கோலி சதத்திற்கு நெருங்கி சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்த்து கொண்டு இருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 49 ஒரு நாள் போட்டிகளின் சதத்தை விராட் கோலி இன்றைய போட்டியில் சமன் செய்வார் என எதிர்பார்த்த நிலையில் 88 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி மீண்டும் அந்த வாய்ப்பை தவற விட்டார் கோலி.
அதன் பின் கேஎல் ராகுல் 21 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற சூர்யா குமார் யாதவ் 12 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் நிதானமாக ஆடி ரண்களை குவித்து கொண்டிருந்த ஷ்ரேயஸ் ஐயர் 56 பந்துகளில் 82 ரன்கள் அடித்த நிலையில் அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார். முகமது ஷமி 2 ரன்கள் ஆட்டம் இருந்து வெளியேற ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் குவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 357 ரன்களை குவித்தது இந்திய அணி.இலங்கை அணிக்கு 358என்ற மாபெரும் இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
358 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணி ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மாபெரும் தோல்வியை தழுவியது. இலங்கை அணிக்கு அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்களும் தீக்ஷனா 6 ரன்களும் ரஜித்தா ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் விக்கெட்டுகளும் ஷமி விக்கெட்டுகளும் பும்ரா விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி இலங்கை அணியை எளிதாக 300 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.
நான் முற்றிலும் ஏமாற்ந்து போனேன். அவர்கள் சீம் மற்றும் ஸ்விங்குடன் நன்றாகப் பந்துவீசினர், துரதிர்ஷ்டவசமாக எங்களால் திறமைக்கு ஏற்றவாறு எங்களால் விளையாட முடியவில்லை. நாங்கள் முதலில் பந்து வீசியது ஏதும் தவறு இல்லை. விக்கெட் கொஞ்சம் மெதுவாகத் தெரிந்தது அதனால்தான் நான் முதலில் பந்து வீச விரும்பினேன். மதுஷங்க நன்றாகப் பந்துவீசினார் என்று நினைக்கிறேன், ஆனால் ஷுப்மானின் வாய்ப்பும், விராட்டின் வாய்ப்பும் எடுபடவில்லை, பின்னர் ஆட்டம் கொஞ்சம் மாறியது. ஆனால் மிடில் ஓவர்களில் அனைவரும் சிறப்பாக பந்து வீசினர். முதல் ஆறு ஓவர்களில் அவர்கள் நன்றாகப் பந்துவீசினார்கள், அவர்களின் வேகப்பந்து வீச்சுக்கு நாம் பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துடன் இரண்டு போட்டிகள் உள்ளன, எனவே நாங்கள் வலுவாக மீண்டு வருவோம். என்று இலங்கை அணியின் கேப்டன் கூறியிருந்தார்.