சாம்பியன் ட்ராபியை வெல்வதில் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை – இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்.
இன்று ஜூன் 7-ம் தேதி ஓவலில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா தலைமையிலான அணி எந்த வித அழுத்தத்திலும் இல்லை என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்புகிறார். இதற்கிடையில் சமீப
இன்று ஜூன் 7-ம் தேதி ஓவலில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா தலைமையிலான அணி எந்த வித அழுத்தத்திலும் இல்லை என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நம்புகிறார். இதற்கிடையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஐ.சி.சி நிகழ்வைச் சுற்றியுள்ள பரபரப்பானது குறைவாக இருப்பதாகக் கூறினார், ஏனெனில் ஊடக சந்திப்புகள் பெரும்பாலும் ஆஷஸ் 2023 மையமாக கொண்டுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் முடிந்த கொண்டிருந்ததால் இந்திய அணி மூன்று பேட்ச்களாக லண்டனை அடைந்து வெளிநாட்டு சூழல்களுக்கு பழகுவதற்காக கடும் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் கால்பந்து போட்டி, மற்றும் அயர்லாந்திற்கு எதிரான இங்கிலாந்து போட்டி போன்றவற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டிக்கான ஆரவாரம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் தான் இந்திய அணியின் பாய்ச்சியாளர் ராகுல் ட்ராவிட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் .அதில் “இந்திய அணி எந்த விதமான அழுத்திலும் இல்லை, இருந்ததும் இல்லை.
அதாவது, ஐசிசி கோப்பையை வெல்லும் முயற்சியில் நாங்கள் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. நிச்சயமாக நாங்கள் வெற்றி பெற்றால் நன்றாக இருக்கும். ஐசிசி போட்டியில் வெற்றி பெறுவது என்பது அளவு கடந்த மகிழ்ச்சியை அளிக்கும். இந்த இடத்திற்கு வருவதற்கு பல முயற்சிகளை செய்திருகிறோம். இது எங்களுடைய இரண்டு வருட கடின உழைப்பின் உச்சம்.
பல வெற்றிகளின் உச்ச கட்டம் தான் எங்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணி உலகில் பல இடங்களில் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் ஒரு போட்டியாக இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது, இங்கிலாந்தில் தொடர்களை சமன் செய்வது, பின்னர் நீங்கள் டேபிளில் நிற்கும் இடத்தைப் பார்ப்பதற்கு அதிலிருந்து நிறைய பல விஷியங்களை செய்தோம் என்றார் ட்ராவிட்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “உங்களிடம் ஐசிசி கோப்பை இருக்கிறது, அல்லது இல்லை என்பதினால் எந்த விஷயமும் மாறப்போவதில்லை. ஆமாம் இது ஒரு பெரிய விஷயம் தான், ஆனாலும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்வது என்பது பெரிய அனுபவமாகவும், மிகுந்த மகிழ்ச்சியையும் தரும் என்றார் ட்ராவிட்.