எங்களுக்கு அந்த மாறி கொள்கை எல்லாம் கிடையாது. ரோஹித் ஷர்மா குறித்து மனம் திறந்து பேசிய சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன்.

ipl தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம

By ·

ipl தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது. இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர்.

ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. கேப்டன்ஷிப் மாற்றத்திற்கு பின் ரோஹித் ஷர்மாவை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இது குறித்து சென்னை அணியின் ceo காசிவிஸ்வநாதன் தற்போது அது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நாங்கள் மும்பை அணியிடம் எந்த ஒரு வீரரையும் நாங்கள் டிரேடிங் மூலம் வாங்க முயற்சிக்கவில்லை.எங்களுக்கு அது போன்ற முறையில் வீரர்களை டிரேடிங் செய்யகூடாது என்று கொள்கையில் இருகின்றோம். மேலும் எங்களுக்கு மும்பை அணியிடம் வீரர்களை தர எந்த ஒரு வீரரும் இல்லை. அதற்காக நாங்கள் மும்பை அணியை அணுகவும் வில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் நேற்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார்.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. அந்த வீரர்களையே ஐபிஎல் அணிகள் தற்போது கோடிகளை கொட்டி வாங்கியது. ஒரு வீரருக்கு இவ்வளவு கோடி கொடுத்து வாங்க கூடாது என்று ரசிகர்கள் ஐபிஎல் அணிகளை விமர்சித்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை