அவர் நல்லா விளையாடி இருந்தார். எங்களுக்கு பனி வந்தது பாதகமாக அமைந்தது – ருதுராஜ் கெய்க்வாட்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 39வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 39வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த இரு அணிகளும் இதற்க்கு முன்பு நடந்த போட்டியில் சென்னை அணி லக்னோ அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. அதற்க்கு பதிலடி தரும் வகையில் தான் இன்றைய போட்டி அமையும் என எதிர்பார்த்த நிலையில் அதற்க்கு மாறாகவே அமைந்தது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை அவர் தேர்வு செய்தார். இதன் முடிவாகவே சென்னை அணி 20 அணி இருபது ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்களை சென்னை அணி குவித்து இருந்தது. இதில் பவர் ப்ளே ஓவரில் ரகானே 1 ரன்னிலும் மற்றும் மிட்சல் 11 ரன்களிலும் வெளியேற அதன் பின் ருதுராஜ் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவித்து வந்தனர். இந்த நிலையில் ஜடேஜாவுக்கு பந்து சரியாக படவில்லை அவரும் 16 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் துபேவுடன் இணைந்து ருதுராஜ் அணிக்கு சிக்சர் பவுண்டரி மூலம் ரன்களை அடித்து வந்தனர்.
துபே 66 ரன்களும் ருதுராஜ் 108* ரன்களையும் அடித்து இருந்தார். இறுதியில் ஒரு பந்தை எதிர் கோல வந்த தல தோனியியும் ஒரே பந்தில் பவுண்டரி அடித்து இருந்தார். அதன் பின் பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணி ஆரம்பத்தில் பவர் ப்ளே முடிவுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பின் வந்த மார்கஸ் ஸ்டோனிஸ். தனி ஒரு மனிதராக போராடி சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வைத்தே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். இதில் அவர் 63 பந்துகளில் 124 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் 13 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும்.
நேற்றைய போட்டியில் சென்னை அணியின் பீல்டிங் மற்றும் பந்துவீச்சு மோசமாகவே இருந்தது எனலாம். ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் அதன் பின் டெத் ஓவர்களில் கேவலமாக பந்துவீசி ரன்களை வாரி வாரி வழங்கி இருந்தது. தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கூறுகையில், இந்த தோல்வி எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. 13வது ஓவரில் நாங்கள் ஆட்டத்தை கையில் எடுத்தோம், ஆனால் ஸ்டோனிஸுக்கு வாழ்த்துகள். பனி விளையாடியதில் பெரும் பங்கு இருந்தது. இது சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்தில் இருந்து விலக்கியது. நாங்கள் விளையாட்டை இன்னும் ஆழமாக எடுத்திருக்கலாம்.
ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி, நீங்கள் கட்டுப்படுத்த முடியாததைக் கட்டுப்படுத்த முடியாது. பவர்பிளேயில் இரண்டாவது விக்கெட்டை இழந்தோம், அந்த நிலையில் அவர்தான் வந்தார். எங்களிடம் ஒரு தெளிவான செயல்முறை உள்ளது, எப்போது ஒரு விக்கெட் விழும்போதெல்லாம் ஜட்டு தான் உள்ளே வருவார். [ஸ்கோர்?] ஆம், முதலில் பேட்டிங் செய்த எங்களால் அதற்கு மேல் கிடைத்திருக்க முடியாது. அது போதும் என்று நான் நினைக்கவே இல்லை. எங்களிடம் இருந்த பனியின் அளவுடன் அது போதுமானதாக இருந்தது. அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் வருக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறினார்.