அவர் அடிக்க ஆரம்பிச்சுட்டா பெரிய ஷாட்டுகளை ஆடுவார் – சுப்மன் கில்.
ஐபிஎல் 2023ன் கடைசி லீக் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் சிறப்பாக விளையாடியும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை தட்டி சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்க
ஐபிஎல் 2023ன் கடைசி லீக் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் சிறப்பாக விளையாடியும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை தட்டி சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி மற்றும் டு பிளசிஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
டு பிளசிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க. மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் லோமரோர் 1 ரன்னில் அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இருந்த போதிலும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 60 பந்துகளிலே தனது அடுத்தடுத்து சதத்தை பூர்த்தி செய்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தனர்.
இந்நிலையில் 198 ரன்கள் இலக்கை துரத்த வந்த குஜராத் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. சாஹா 12 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் விஜய் சங்கர் பொறுமையாக சுப்மன் கில்லிற்க்கு துணையாக ஆடினார். மேலும் 39 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார் சுப்மன் கில். இதனால் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த வருட பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
சுப்மன் கில் :
நான் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கிறேன். இந்த ஐபிஎல் சீசனில் என்னால் முதல் பாதியில் பெரிய ரன்களை அடிக்க முடியவில்லை. 40-50 ரன்கள் அடித்ததும் அவுட்டாகி கொண்டே இருந்தேன். ஆனால் இந்த ஐபிஎல் இரண்டாவது பாதியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். உங்களின் மீது நம்பிக்கை வைத்து இளையாட வேண்டும் என்ற அவர் விஜய் ஷங்கர் பற்றி பேசினார்.
அவர் கூறுகையில் ” இரண்டவது இன்னிங்கில் பந்து ஈரமாக இருந்தது. ஆனால் விஜய் சங்கர் வந்ததும் பந்துகளை பலமாக அடிக்க ஆசைப்பட்டார். ஆனால் நான் அவரிடம் சென்று பந்தினை பார்த்து நல்ல ஷேப்புடன் டைமிங் செய்யுங்கள் பலமாக அடிக்க வேண்டாம் என்று நான் கூறினேன். விஜய் சங்கர் போன்ற ஒரு பிளேயர் நல்ல ஒரு முறையில் பேட்டிங்கில் மொமென்டத்தை பெற்று விட்டால் மிகப்பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது.
என்னுடைய இந்த இன்னிங்ஸ் எவ்வளவு முக்கியமான என்று எனக்கு தெரியும். முதலில் நீங்கள் எப்படிபட்ட வீரர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் சென்னையை எதிர்த்து விளையாடுவது சுவாரசியமாக இருக்க போகிறது. எங்களிடம் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். எனவே சென்னை அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு செல்வோம் என்று நம்புகிறேன் என்று கூறினார் சுப்மன் கில்.