எங்களுக்கு வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை இல்லை. மேக்ஸ்வெல் தான் அதை செய்து காட்டினார் – மேத்யூ வேட்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடர்களை விளையாடி வருகின்றது. இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஈடு கட்டும் வகையில் இந்திய அணி இந்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதில
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட T20 தொடர்களை விளையாடி வருகின்றது. இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஈடு கட்டும் வகையில் இந்திய அணி இந்த போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. அதில் நேற்றுடன் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இறண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் இந்திய நேற்றைய போட்டியில் தோல்வியை தழுவியது . நேற்றைய தொடர் ஆனது அசாம் மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கட்டுகளை மட்டுமே எழுந்து 222 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஆஸ்திரேலியா அணியின் பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாண்டு சிறப்பாக ரன்களை குவித்து வந்தனர்.
அணியின் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்துள்ளார் அதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கும். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக விளையாடிக் கொண்டு வந்த ருதுராஜ் அரை சதத்தை பூர்த்தி செய்த கையோடு வேகமாக சதத்தையும் பதிவு செய்து இந்திய அணிக்கு நல்ல இலக்கை எட்ட உதவினார். அதன் பின்பு சூரியகுமார் யாதவ் 39 ரன்களும் திலக் வர்மா 31 ரன்கள் சேர்த்து அணிக்கு பலத்தை அளித்தனர். ஆஸ்திரேலியாவின் சார்பில் பந்துவீச்சாளர்கள் ஆரோன் ஹார்டி,ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் தலா ஒரு விக்கெட் களை வீழ்த்தி இருந்தனர்.
223 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும் இறுதி வரை போராடி ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவு 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 104 ரன்களுக்கும் ஹெட் 35 ரன்களும் வேட் 28 ரன்களை குவித்திருந்தனர்.
எனவே ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ரவி பிஷ்னாய் இரண்டு விக்கெட்களையும் ஆவேஷ் கான் அக்சர் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தனர். மேக்ஸ்வெல் கடைசி வரை போராடி இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற வைத்தார். இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் கூறுகையில்
சேச்சிங் செய்வது கடினமாக இருந்தது. அந்த 20 ஓவர்களை வெளியேற்றுவது கடினமான வேலை மற்றும் கேனுக்கு தாமதமாக காயம் ஏற்பட்டது கடைசி சில ஓவரை எங்களின் சிறந்த வீரர்களில் ஒருவரான மேக்ஸ்வெல் வீச வைத்தோம். ஆஸ்திரேலியாவுக்காக டி20 போட்டிகளில் விளையாடி, சதம் அடித்ததே அவருக்கு மிகவும் சிறப்பானது. வெற்றி பெரும் என்று “நம்பிக்கை” என் மனதில் இருந்தது என்று நான் கூறமாட்டேன், ஆனால் நாங்கள் சேஸிங்கில் பேட் செய்யலாம் என்று எங்களுக்குத் தெரியும். கடைசி நான்கு ஓவர்களில் ஒரு கட்டத்தில் நாங்கள் ஒரு விக்கெட்டைப் பெறுவோம் என்று நான் நம்பினேன்.
பின்னர் மேக்ஸ்வெல் அந்த ஓவரில் பேட்ஸ்மேன்களை வெளியேற்றலாம் என்று நினைத்தோம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் ஒரு விக்கெட் எடுக்கவில்லை மற்றும் சில ரன்களுக்கு செல்ல முடிந்தது. ஆனால் அனைத்தும் நல்ல வேடிக்கையாக இருந்தது. எப்படியும் அந்த 30 ரன்கள் கிடைக்கமல் இருந்திருந்தால் மாக்ஸிக்கு அந்த சதம் கிடைத்திருக்காது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் தேவைப்பட்டது மற்றும் நிறைய வீரர்கள் வீட்டிற்குச் செல்கிறார்கள், எனவே இந்தியாவில் எப்படி விளையாடுவது என்பதை இளையவர்களுக்குக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு. அடுத்த ஆட்டத்தில் மற்றொரு வெற்றியுடன் அதை தீர்மானத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம்.