இங்கு நாங்கள் 31 வருடமாக தொடரை கைப்பற்றியதில்லை. ஆனால் இந்த முறை அதை மாற்றுவோம் – கேப்டன் ரோஹித் ஷர்மா.
தென்னாப்பிரிக்கா எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சமன் செய
தென்னாப்பிரிக்கா எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் விராட் கோலி தனது வழக்கமான நோக்கத்துடன் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை டி20 போட்டியில் தொடரை சமன் செய்து இருந்ததாலும் ஒரு நாள் போட்டியை 2-1 என்று தொடரை கைப்பற்றி இருந்தந்து. அதன் பின் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதுகின்றன.
முதல் ஆட்டம் செஞ்சூரியனில் செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 26 அன்று தொடங்குகிறது. அதில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இண்டிஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருகின்றனர். இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய மும்முரமாக தயாராகி வருகின்றார். இந்திய அணி இதற்க்கு முன்பாக 31வருடங்களாக தென்னாபிரிக்காவில் சென்று அங்கு தொடரையும் வென்றது இல்லை.
தென்னாப்பிரிக்கா அணியின் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ரோஹித் ஷர்மா அது பற்றி சிலவற்றை கூறியுள்ளார். அவர் கூறுகையில், இங்கு பவுன்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் பெறும் பக்கவாட்டு இயக்கம் காரணமாக பந்துவீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று நான் நினைகின்றேன். ஆட்டம் தொடரும் போது ஆடுகளம் விரிசல்கள் விரிவடைவதால் ஆட்டம் கொஞ்சம் கடினமாகிறது என்று போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா கூறினார்.
தென்னாப்பிரிக்காவில் தனது 31 வருட ஜின்க்ஸை முறியடித்து தொடரை வெல்ல இந்தியா தயாராக உள்ளது. முக்கியமான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெறுவதற்கு, இந்திய அணி இந்த முடிவைப் பெறுவது மிகவும் முக்கியமானது. இது ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் விரும்பும் சவால் ஆகும். ஒவ்வொரு நாளும் அதன் சொந்த சவாலைக் கொண்டிருப்பதால், ஒரு குறிப்பிட்ட நாளில் பேட் செய்வது நல்லது என்று என்னால் சுட்டிக்காட்ட முடியாது. விளையாட்டு செல்லும்போது அது கடினமாகவும் கடினமாகவும் மாறும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ள விரும்பும் சவால்கள், கடினமான சூழ்நிலையில் தரமான பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக விளையாடி அணிக்கு நல்ல முடிவுகளைப் பெற வேண்டும். நமக்கு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும். என்ன செய்ய வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்று விவாதித்தோம். டெஸ்டுக்குத் தயாராவதற்கு எங்களுக்கு ஒரு நல்ல நேரம் கிடைத்தது, இப்போது தனிநபர்கள் வரை சென்று அணிக்கான வேலையைச் செய்ய வேண்டும் என்றும் ரோஹித் முடித்தார்.