இந்த போட்டிக்கு பிறகு நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் – கே.எல்.ராகுல்.

உங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்ற முடிவடைகிறது. இன்றைய கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியும் இந்திய அணியும் பலப்பரிட்சை செய்தது. இதில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மட்

By ·

உங்களுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்பொழுது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்ற முடிவடைகிறது. இன்றைய கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியும் இந்திய அணியும் பலப்பரிட்சை செய்தது. இதில் இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று அடுத்த 15ஆம் தேதி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

நெதர்லாந்து அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்கு தகுதி பெரும் என்ற நம்பிக்கையில் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து 410 ரண்களை குவித்து இருந்தனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் கில் இந்திய அணிக்கு சிறந்த அடித்தளத்தை அமைத்து தந்தனர். சுப்மான் கில் 32 பந்துகளில் 51 ரன்கள் இருந்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 61 ரன்கள் இருந்த நிலையில் அவர் மற்றும் வெளியேறினார். அதுபோல அதன் பிறகு வந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி நிதானமாக விளையாடி 56 பந்துகளில் 51 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு ரன்களை குவிக்க உதவினார். அதன் பின் வந்த ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அணிக்கு நல்ல பாட்டன்ஷிப் அமைத்து பெரிய இலக்கிற்கு உதவினர்.

84 பந்துகளில் தனது உலகக்கோப்பை முதல் சதத்தை பூர்த்தி செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். அதன் பின்பு அதிரடியை காட்டதொடங்கிய கே.எல் ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார் 102 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 128ரன்களையும் குவித்து இருந்தார். எனவே இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 410 ரன்களை குவித்தனர். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் லீட் 2 விக்கெட்டுகளையும் மீக்ரம் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்களை குவித்து இருந்தார் அதில் 11 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். போட்டியை பற்றி கே.எல்.ராகுல் கூறுகையில்,

நடுவில் சிறிது நேரம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த என்னால் முடிந்த வரை போட்டியை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறேன். கடைசி பத்து நங்கள் செல்ல வேண்டும். கையில் விக்கெட்டுகள் மற்றும் ஸ்ரேயஸ் செட் திட்டம் தெளிவாக இருந்தது. முடிந்தவரை அதிக ரன்களைப் பெற முயர்த்சிதோம் அது மகிழ்ச்சியாக இருந்தது. அனைவருக்கும் தெளிவான விளையாட்டுத் திட்டம் உள்ளது, நாங்கள் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். இந்த விளையாட்டை இங்கே வென்று, அரையிறுதிக்கு நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள காத்திருக்கவும். [விக்கெட் கீப்பிங்] சில சமயங்களில் உடலில் சற்று வலியாக இருக்கும் ஆனால் மற்றபடி விளையாட்டில் முழுவதுமாக ஈடுபடுவதை நான் ரசிக்கிறேன்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை