இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் தான் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக அணியில் எடுத்தோம் – தேர்வு குழு அதிகாரி சபா கரீம் தகவல்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உ
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.
நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.
இதில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல இளைஞர்கள் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 14 மாதங்களுக்கு பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். இதில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். மேலும் பும்ரா மற்றும் சிராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு குறித்து தேர்வு குழு அதிகாரி சபா கரீம் கூறுகையில் இப்போது எந்த சந்தேகமும் இல்லை. இப்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த இரு வீரர்களையும் சேர்த்துள்ளீர்கள் என்றால், தேர்வாளர்களின் சிந்தனையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். உலகக் கோப்பைக்கு அனுபவம் தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மீண்டும் களமிறங்கியுள்ளனர். இன்னொரு விஷயமும் இருக்கிறது. இதுவரை, ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாக தேர்வாளர்கள் நம்பிக்கை காட்டினர்.
ஆனால் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவிடம் திரும்பிச் சென்றுள்ளனர். அதனுடன், ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா காட்டிய ஆக்ரோஷம் மற்றும் அவர் எப்போதும் அதைப் பற்றி பேசுகிறார். அது இன்னொரு பெரிய காரணம். ரோஹித்தை தேர்வு செய்தவுடன், விராட்டை அணியில் இருந்து வெளியேற்ற முடியாது. ரோஹித்துடன், இன்னும் அதிக மேட்ச்-வின்னிங் நாக்களுக்காக விராட்டையும் அணியில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.