வீடியோ : நன்றாக விளையாடியும் பிளே செல்லும் தகுதியை இழந்து விட்டோம் – வருந்தி பேசிய டுப்ளஸி.
ஐபிஎல் 2023ன் கடைசி லீக் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் சிறப்பாக விளையாடியும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை தட்டி சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்க
ஐபிஎல் 2023ன் கடைசி லீக் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் சிறப்பாக விளையாடியும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை தட்டி சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி மற்றும் டு பிளசிஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.
டு பிளசிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க. மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் லோமரோர் 1 ரன்னில் அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இருந்த போதிலும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 60 பந்துகளிலே தனது அடுத்தடுத்து சதத்தை பூர்த்தி செய்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தனர்.
இந்நிலையில் 198 ரன்கள் இலக்கை துரத்த வந்த குஜராத் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. சாஹா 12 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் விஜய் சங்கர் பொறுமையாக சுப்மன் கில்லிற்க்கு துணையாக ஆடினார். மேலும் 39 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார் சுப்மன் கில். இதனால் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த வருட பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
டுபிளஸி கூறியது :
இந்நிலையில் ஆர்சிபியின் இந்த தோல்விக்கு பிறகு தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் அணியின் பல வீரர்களும் கேப்டன் டுபிளசியும் பேசியிருந்தார். அப்படி அவர் கூறுகையில் “இந்த போட்டிக்கு முன்னர் சில சிறப்பான போட்டிகளை விளையாடினோம். ஆனால் இப்படி சீசன் முடிந்ததால் நான் மிகவும் ஏமாற்றமடைகிறேன். எங்களுடைய அணியை கூர்மையாக கவனித்தால், மனசாட்சி படி சொல்லவேண்டும் என்றால் நாங்கள் இந்த சீசனில் சிறந்த அணி கிடையாது.
RCB v GT Game Day Review
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 22, 2023
Captain Faf, players and the coaches reflect on the #IPL2023 season and send in their gratitude and regards to the 12th Man Army, after match that brought an end to our campaign this year.#PlayBold #ನಮ್ಮRCB pic.twitter.com/8Vst2kRZLV
எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தினால் எங்களினால் சிறப்பான விளையாட்டை இந்த சீசன் முழுவதும் காட்ட முடிந்தது. ஆனால் ஒரு அணியாக நாங்கள் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டோம். ஏனென்றால் கடந்த 15, 14 போட்டிகளில் எங்களுடைய செயல்திறனை பார்த்தோம் என்றால் தெரியும். இருந்த போதிலும் தோல்வியடைந்தது வலிக்கிறது. மும்பை போட்டியில் எங்களால் முடிந்த அளவிற்கு போராடினோம் ஆனாலும் தோல்வியை தழுவிவிட்டோம் என்று அந்த வீடியோவில் கூறினார் ஆர்சிபி கேப்டன் ஃபாப் டு பிளசிஸ்.
மேலும் அவர் கூறுகையில் “மெஸ்வெல் பார்ட்னர்ஷிப்பை இந்த வருடம் எதிர்பார்த்தோம். எனக்கும் விராட்கோலிக்கும் சிறப்பான பார்ட்னர்ஷிப் இந்த சீசன் முழுவதுமே இருந்தது. சிராஜ் மிகவும் சிறப்பான பந்துவீச்சாளர். அவரினால் வீரர்களுக்கும் உத்வேகம் கிடைத்தது. ஆனால் நாங்கள் அதனை தொடர்ந்து செய்யவில்லை என்று நினைக்கிறன் என்றார் பிளசிஸ்.