சூரியகுமார் யாதவ் போட்டியின் போது இதைத்தான் என்னிடம் கூறினார் – வெற்றிக்கு பிறகு ரோஹித் ஷர்மா கொடுத்த பேட்டி.

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 57வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான பேட்டிங் செய்து 218 ரன்களை குவித்தது

By ·

ஐபிஎல் 2023 தொடரில் நேற்று நடந்த 57வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பான பேட்டிங் செய்து 218 ரன்களை குவித்தது.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் இன்னிங்ஸ் ஆரம்பம் முதலே தடுமாறியது. குஜராத் பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக பேட்டிங் செய்யாத நிலயில் இறுதியில் குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சூர்யாவின் பேட்டிங் பற்றி சில விஹசியங்களை பேசினார்.

ரோஹித் சர்மா கூறியது :

ரோஹித் ஷர்மா பேசுகையில் சூர்யாவின் அற்புதமான சதம் குறித்தும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு குறித்து கூறியதாவது “இது ஒரு சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தது. குறிப்பாக எங்களுக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி. முதலில் பேட்டிங் செய்து பின்னர் அந்த ஸ்கோரை பாதுகாத்து வெற்றி பெற்றது மிகவும் சுவாரசியமாக இருந்தது.

தனது அணியின் பந்துவீச்சைப் பற்றி பேசிய கேப்டன் ரோஹித் “இந்த வகையான போட்டியில் நீங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். பந்து வீச்சாளர்கள் அதனை சரியாக செய்தார்கள். சூர்யாவுக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நாங்கள் வலது-இடது பேட்ஸ்மேன்களை களத்தில் விளையாட வைக்க முயற்சித்தோம். ஆனால் சூரிய தான் பேட்டிங் செய்ய விரும்புவதாக கூறினார் அது அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

சூர்யாவின் இன்னிங்ஸ் மற்றும் அவரது தன்னம்பிக்கையைப் பாராட்டிய கேப்டன் ரோஹித் சர்மா “அவருக்கு வித்தியாசமான நம்பிக்கை உள்ளது, அது மற்றவர்களை ஊக்குவிக்கிறது. அவர் ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிதாக தொடங்க விரும்புகிறார். அதோடு முந்தைய ஆட்டத்தை திரும்பிப் பார்க்கவில்லை. சில நேரங்களில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்து நீங்கள் செய்ததைப் பற்றி பெருமைப்படலாம் ஆனால் சூரிய குமார் யாதவ் அப்படி செய்யவில்லை என்று கூறினார் ரோஹித் ஷர்மா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை