“நாங்கள் மீண்டும் இதே மைதானத்தில் இறுதிப் போட்டியில் விளையாடுவோம்” – பவுமா.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் 42வது போட்டியைத் தென் ஆப்பிரிக்கா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியல

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் 42வது போட்டியைத் தென் ஆப்பிரிக்கா அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. ஆப்கானிஸ்தான் அணி புள்ளி பட்டியல் இருக்கிறது அரைஇறுதி தகுதி சுற்றில் வெளியேறிவிட்டது ஆனால் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் இடத்தில் வலுவாக இருக்கின்றது.

இந்த ஒரு போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் எந்த ஒரு மாற்றமும் பள்ளி பட்டியலில் நிகழப் போவதில்லை என்றாலும் இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி அடுத்த பாடியாக பலமாக இந்த ஆஸ்திரேலியா அணிவது சுற்று மாத உள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 50 ஆவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில் 244 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்தில் சிறந்த தொடக்கம் அமைந்தாலும் அது அடுத்து அந்த அணியின் வீரர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆப்கானிஸ்தான் அணியின் அதிகபட்சமாக உமர் சாய் 107 பந்துகளில் 97 ரன்களை குவித்து இருந்தார். அதில் நான்கு பவுண்டரிக்களும் மூன்று சிக்சர்களும் அடங்கும். அதன் பிறகு நூர்அகமது 26 ரன்களும் ரஹ்மத் 26 ரன்களையும் குவித்திருந்தனர். எனது ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்கள் மட்டுமே குறித்து இருந்தது. போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக பந்து ஆப்கானிஸ்தான் அணியை கட்டுப்படுத்தியிருந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியின் கோட்ஸி 4 விக்கெட்டுகளையும் மகாராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் இங்கிடி 2 விக்கெட்டுகளையும் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

245 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணிக்கு ஆரம்பத்தில் நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அதன் பின் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சற்று தருமாறு தடுமாறிய விளையாடி வந்தனர். அணியின் அதிகபட்சமாக ராஸ்ஸி வான் டெர் டுசென் 76 ரண்களும் டீ காக் 41 ரன்களையும் டேவிட் மில்லர் ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 39 ரன்களையும் குவித்தனர் எனவே தென்னாபிரிக்கா அணி 47.3 ஓவர்கள் முடிவில் 247 ரன்களை அடித்து தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. நபி மற்றும் ரஷித் கான் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ரஹ்மான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

போட்டியின் வெற்றி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில். என்னுடைய காலும் வலியாக இருந்தது. அதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் வெளியேறி இருக்க நினைத்தேன். வெற்றி பெறுவது ஒரு பழக்கமாக தொடர்ந்து எடுத்துச் செல்ல விரும்பி விரும்புகிறேன். தற்போது இரண்டாவது பேட்டிங் போட்டியை வென்று இருக்கிறோம். இது எங்களுக்கு தன்னம்பிக்கையை அளித்து அளிக்கிறது.

வெற்றிக்கு காரணமாக வெண்டர்சன் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையாக விளையாடி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். நாங்கள் நிச்சயமாக இந்த உலகக்கோப்பையை வெல்ல முழுமையாக ரசிகர்களால் நிரம்பியிருக்கும் மைதானத்தில் மீண்டும் அந்த விளையாட விரும்புகிறோம். இப்படி ஒரு கூட்டத்தின் முன் விளையாடுவது மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கின்றது. நாங்கள் அடுத்து ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட வேண்டி இருக்கின்றது. அதற்கு நாங்கள் மனதில் வைத்துக் கொள்ளுவோம்.என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை