இது நாங்க தோக்க வேண்டிய போட்டி..இந்தியாவே வந்து மாட்டிக்கிட்டாங்க – வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்.

மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இந்தியா பல தொடர் கொண்ட போட்டிங்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் பெட்ரா அற்புதமான வெற்றிக்கு பிறகு ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்தியா வெற்றி பெற்றது. இந

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் இந்தியா பல தொடர் கொண்ட போட்டிங்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் பெட்ரா அற்புதமான வெற்றிக்கு பிறகு ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் முதல் டாஸை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் தொடக்கத்தில் மிகவும் சிறப்பாகவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை குவித்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய தொடக்கத்திலேயே சொதப்பி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் அதிகபட்சமாக பூரன் 41(34) ரன்களையும், வெஸ்ட் இண்டீஸ் கப்டன் ரோவ்மேன் பவல் 48(32) ரன்களையும் விளாசினார். இது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றிபெற அதிகமாக உதவியது என்று கூறலாம். இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றவுள்ளார் வெஸ்ட் இண்டீஸ். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மேன் பவல் கொடுத்த பேட்டியில் வெற்றிக்கான காரணம் குறித்து பேசினார்.

ரோவ்மேன் பவல் கொடுத்த பேட்டி :

அவர் கூறியதாவது “இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் இந்த தொடரை வெற்றியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தோம். அது போலவே எங்களுக்கு வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது. சொல்லப்போனால் இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவியிருப்போம். ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக நிலைத்து நிற்கவில்லை இதனால் எனக்கு கடைசி ஓவரில் அதிக நம்பிக்கை இருந்தது.

இந்தியா பந்து வீசுவதை பார்த்த பிறகு எங்களிடம் சுழற்பந்து வீச்சாளரக்ள் பற்றாக்குறை இருப்பதாய் நாங்கள் அறிந்தோம். அதனால் எங்களினால் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி யோசித்தோம். இந்த போட்டியில் பேட்டிங் மிகவும் கடுமையாக இருந்தது. எங்களுக்கு தெரியும் இந்த மைதனாதில் புதிய பந்து ரன்களை கொடுக்கும் என்று. இந்த தொடரானது எப்படி வெஸ்ட் இண்டீஸ் பீட்டர்கள் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை சந்திக்கின்றனர் என்பதை பொறுத்தே இருக்கிறது.

எங்களினால் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். பூரன், ஹெட்மயர், மேயர்ஸ் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் தான் எங்களுடைய அத்தியாவசியமாக பேட்ஸ்மேன்கள். எனக்கு தெரியும் கரீபியன் மண்ணில் விளையாடுவது என்பது மிகவும் கடுமையாக இருக்கும் என்று. ஆனால் ரன்களை அடிக்க தொடங்கி விட்டார் பின்னர் ரன்களை சேர்த்து விடலாம். இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர் மிகவும் சிறப்பாக பந்துவீசி இந்தியாவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்றார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மேன் பவல்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை