நெதர்லாந்து அணியை அங்கேயே கட்டுபடுத்தி இருக்க வேண்டும். அனைத்துப் போட்டிகளிலும் நாங்கள் மோசமாக இருந்தோம் – ஷாகிப் அல் ஹாசன்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. புள்ளி பட்டியலில் பங்களாதேஷ் எட்டவது இடத்திலும்
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. புள்ளி பட்டியலில் பங்களாதேஷ் எட்டவது இடத்திலும் நெதர்லாந்து அணி 10 வது இடத்திலும் இருந்து வருகிறது பங்களாதேஷ் அணி கடந்த நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி அதிலிருந்து மீள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வந்தது.
நெதர்லாந்து அணியும் கடந்த மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று மீதி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. அதிலும் கடைசியாக மோதிய போட்டியில் 309 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆனால் அவர்களுக்கு பேட்டிங் சரியாக கைகொடுக்கவில்லை என்று நினைத்த நேரத்தில் வந்து பந்துவீச்சாளர்கள் கை கொடுத்து போட்டியை வெற்றி பெற வைத்தது.
நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்பரணங்களில் அதாவது ஜீரோ மூன்று ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். அதன் பின் வந்த வீரர்கள் நிதானமாக விளையாடி 229 ரன்களை குவித்தனர். நெதர்லாந்து அணியின் அதிகபட்சமாக எட்வர்ட்ஸ் 68 ரண்களும் வெஸ்லி பாரேசி 47 ரன்களும் ஏங்கல்பிரெக்ட் 35 ரன்களும் அடித்து இருந்தனர். 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கேட்டுகளையும் இழந்து 229 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது.பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் இஸ்லாம், அகமது,ஹாசன் மற்றும் முஸ்தபிசூர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷாகிப் அல் ஹாசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
230 ரன்கள் இலக்காகக் கொண்டு களம் இறங்கி பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் இருந்து சொதப்பலாகவே விளையாடி நெதர்லாந்து அணியிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ அணியின் அதிகபட்சமாக மிராஸ் 35 ரன்கள் முகமதுல்லா இருபது ரண்களும் ரஹ்மான் 20 ரன்களை மட்டுமே அடித்திருந்தனர். நெதர்லாந்து அணியிடம் 87ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது பங்களாதேஷ் அணி. நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் பால் வான் மீகெரென் 4 விக்கெட்டுகளையும் பாஸ் டி லீடே இரண்டு விக்கெட்களையும் கொலின் அக்கர்மேன், லோகன் வான் பீக் மற்றும் ஆர்யன் தத் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் நெதர்லாந்த் அணி 8 இடத்திற்கு முன்னேறி நெதர்லாந்த் அணியை 10 இடத்திற்கு தள்ளினர்.
தோல்வி குறித்து பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் கூறுகையில், நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்று நினைத்தேன், ஆனால் நாங்கள் களத்தில் ஸ்லோவாக இருந்தோம். நாங்கள் அவர்களை 160-170 என்று கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அனைத்துப் போட்டிகளிலும் நாங்கள் மோசமாக இருந்தோம், இது மிகவும் மோசமானது. இன்னும் கிரிக்கெட் வர இருக்கிறது, நம்மை நாமே எடுக்க வேண்டும், அது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் போட்டியை அதிக அளவில் முடிக்க முயற்சிக்க வேண்டும். போட்டி முழுவதும் நாங்கள் போராடி வருகிறோம், வீரர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.