என்ன ஒரு சிறப்பான ஆட்டம். அவரிடம் இது தான் என்னை கவர்ந்தது – கே.எல்.ராகுல் ஆட்டம் குறித்து பாராட்டிய சச்சின்.

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. முதல் ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த

By ·

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நேற்று முதல் போட்டியை விளையாடியது. முதல் ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில் அவர் ஏமாற்றத்தையே அவ அளித்து இருந்தார். இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி விளையாடி வருகின்றது. இந்திய அணி இதற்க்கு முன்பாக 31வருடங்களாக தென்னாபிரிக்காவில் சென்று அங்கு தொடரையும் வென்றது இல்லை.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 5 ரன்கள் எடுத்த நிலையில் ராபாடாவிடம் ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் ஜெய்ஸ்வால் 17 ரன்னிலும், கில் 2 ரன்னிலும் வெளியேற அதன் பின் நிதானமாக விளையாடி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்னிலும் அவருடன் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த கோலி 38 ரன்னிலும் அஷ்வின் 8 ரன்னிலும் ஷர்துல் தாக்கூர் 24 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறியே வந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ராபாடா 5 விக்கெட்டுகளையும் பர்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை திணற வைத்தனர். தற்போது இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே அடித்துள்ளது. தற்போது இரு அணிகளும் டீ இடைவெளியில் இருந்தது. அதன் பின் வந்த கேஎல் ராகுல் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து இருந்தார். கே.எல் ராகுல் தன்னை எங்கு விளையாட சொன்னாலும் அந்த இடத்தில் அவர் தன்னை நிருபித்து கொண்டார்.

தற்போது கே.எல். ராகுல் 70 ரன்னில் விளையாடி வருகிறார். தற்போது மழை குறிக்கிட்டதால் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது. அதன் பின் கே எல் ராகுல் சதத்தைகடந்த பின் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்திய அணி 245 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாகவே விளையாடி வந்தது. இந்திய அணி மிகவும் தடுமாறிய நிலையில் கே.எல்.ராகுல் மட்டும் சிறப்பாக விளையாடி சதத்தை அடித்து இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை குவிக்க உதவி இருந்தார். இந்த சதத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் அவர்க்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில்,

கே.எல்.ராகுல் நன்றாக விளையாடினார். என்னைக் கவர்ந்தது அவருடைய சிந்தனைத் தெளிவு. அவரது கால் வேலை துல்லியமாகவும் உறுதியுடனும் இருந்தது, ஒரு இடி சரியாக நினைக்கும் போது அது நிகழ்கிறது. இந்த டெஸ்ட் போட்டியின் சூழலில் இந்த சதம் முக்கியமானது. நேற்றைய ஒரு கட்டத்தில் அவர்கள் இருந்த இடத்தைக் கருத்தில் கொண்டால் இந்தியா 245 உடன் மகிழ்ச்சியாக இருக்கும். நந்த்ரே பர்கர் மற்றும் கோட்ஸி தென்னாப்பிரிக்க பந்துவீச்சு வரிசைக்கு ஒரு நல்ல கூடுதலாக இருக்கும். நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கா அவர்களின் பந்துவீச்சில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை