கடைசியாக இந்திய மண்ணில் நடந்த “இந்தியா vs பங்களாதேஷ்” ODI போட்டியில் என்ன நடந்தது தெரியுமா?

இன்று உலக கோப்பை போட்டியில் இந்திய அணியானது பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் அற்புதமான ஆட்டத்தினால் பங்களாதேஷ் அணியானது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் மைதானம் என்பது 300 ரன்களுக்கு மேலே அடிக்க

By ·

இன்று உலக கோப்பை போட்டியில் இந்திய அணியானது பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் அற்புதமான ஆட்டத்தினால் பங்களாதேஷ் அணியானது 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த போட்டியில் மைதானம் என்பது 300 ரன்களுக்கு மேலே அடிக்க கூடியது என்பதினால் இது கொஞ்சம் குறைவாக ரன் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியா தன்னுடைய சொந்த மண்ணில் பங்களாதேஷ அணியை எதிகொண்ட போது யாருமே எதிர்பார்க்காத ஓரு சம்பவம் நடந்தது. அதாவது இந்தியா மற்றும் பங்களாதேஷ் என இரண்டு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் மே 1998 இல் இந்தியாவில் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்தியா, வங்காளதேசம் மற்றும் கென்யாவை உள்ளடக்கிய முத்தரப்பு தொடரின் போது இரு அணிகளும் சந்தித்தன.

இறுதிப்போட்டியில் கென்யாவை வீழ்த்தி முத்தரப்பு தொடரை கைப்பற்றிய வேளையில், இந்திய அணி பங்களாதேஷ் இரண்டு முறை எதிர்கொண்டது. இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது, அங்கு இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் வங்கதேசத்தை பேட்டிங் செய்ய வாய்த்த இந்தியா எந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் ஒரு முன்மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்கள் பங்களாதேஷ் அணியை 21/3 என்று அதிரடி காட்டிய நிலையில் அடுத்த 50 ரன்களுக்குள் மேலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி மேலும் சேதத்தை ஏற்படுத்தினார்கள். ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஹசிபுல் ஹொசைன் மற்றும் கலீத் மஷுத் இடையேயான 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் பங்களாதேஷ் 100 ரன்களைக் கடக்க உதவியது. பின்னர், சச்சின் டெண்டுல்கர் இரண்டு பந்துகளில் இரண்டு முறை விக்கெட் எடுத்து எதிரணியை 115 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்நிலையில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணிக்கு டெண்டுல்கரின் அற்புதமான ஆட்டத்தினால் 33 ரன்கள் எடுத்த நிலையில், நவ்ஜோத் சிங் சித்து 52 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். இன்னும் 44 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும் மேலும் 10 விக்கெட்டுகள் கைவசம் இருந்த நிலையில், இந்திய அணி சற்று கவனம் இழந்து 72/0 லிருந்து 107/5 என்ற நிலைக்கு சென்றது.

இருப்பினும், 16 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்த அஜய் ஜடேஜா பொறுமையாக விளையாட இந்தியா அந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியின் போது 10 ஓவர்களில் 3/17 எடுத்த அனில் கும்ப்ளே ஆட்ட நாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை