சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார்?? தோனியின் முடிவு என்ன?? அம்பதி ராயுடு பேச்சு.

ஐபிஎல் 2024 அட்டவணை சில தினங்களுக்கு முன்பு வெளியானது அதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மார்ச் 22ம் தேதி உள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டனாக தோனியும் பெங்களூர் அணியின் கேப்டனாக டுபிளசிஸ் செயல்படவுள்ளார். இது தான் தோனிக்கு கட

By ·

ஐபிஎல் 2024 அட்டவணை சில தினங்களுக்கு முன்பு வெளியானது அதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மார்ச் 22ம் தேதி உள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டனாக தோனியும் பெங்களூர் அணியின் கேப்டனாக டுபிளசிஸ் செயல்படவுள்ளார். இது தான் தோனிக்கு கடைசி வருடம் என்பதால் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.கடந்த வருடம் ஆரம்பத்தில் இருந்து அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்து வந்தார்.

அவருக்கு இது தான் கடைசி வருடம் என்று அவருக்கு பிறகு ருதுராஜ் தான் கேப்டன்சி செய்வார் எனவும் ரசிகர்கள் அவர்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர். மேலும் தோனியை நம்பர் 5 இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க அதற்கு சென்னை அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியிருந்தார். அவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய மாட்டார் அவர் ஆறு அல்லது ஏழாவது இடத்தில் விளையாடுவார் என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சென்னை அணிக்கு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. தோனியில் ஒரு சில ஓவர்களில் இருக்கையில் அமர்ந்து விட்டு வேறு ஒருவரை கேப்டன்சி செய்ய வைக்கலாம். இதுவே தோணியின் கடைசி ஆண்டாக இருந்தால் சென்னை அணி நிர்வாகம் இது போன்ற செயல்களில் ஈடுபடும். இன்னும் ஒரு சில வருடங்கள் விளையாடலாம் என்று முடிவு செய்து இருந்தால் அவரை தொடர்ந்து அணியின் கேப்டனாக இருப்பார் என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் நான் அவரை கேப்டனாகவே பார்க்க விரும்புகிறேன்.

அவரை காயம் எப்போதும் விலக்கி வைக்காது நான் அவருடன் பல முறை விளையாடி உள்ளேன். அவருக்கு 10% உடற்தகுதி இருந்தால் கூட இந்த சீசன் முழுவதும் அவர் விளையாடுவார். அவர் முழங்கால்காயத்துடன் விளையாடி உள்ளார் எனவே அவர் இந்த சீசன் முழுவதும் அவருக்கு முழங்கால் காயம் அவரை தடுக்காது என்று நான் நினைக்கிறேன் என்று அம்பதி ராயுடு கூறியிருந்தார். முதல் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அதில் முதல் போட்டியில் சென்னை சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதவுள்ளது

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை