இங்கிலாந்தின் பாஸ்பால் முறையை பந்தாடி ஆஸ்திரேலியா – கவாஸ்கர் சொன்னது நடக்கிறதோ?
இன்னும் சில நாட்களின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்படி அந்த விறுவிறுப்புக்கு முன்பாக பல முடியமாக் போட்டிகள் நடிப்பெற இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ
இன்னும் சில நாட்களின் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற இருக்கிறது. அப்படி அந்த விறுவிறுப்புக்கு முன்பாக பல முடியமாக் போட்டிகள் நடிப்பெற இருக்கிறது. குறிப்பாக ஆசிய கோப்பை, இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்கள் இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு இங்கிலாந்திற்கும் இடையே வரலாற்று சிறப்பவுமிக்க ஆஷஸ் தொடரானது நடைபெற்று வருகிறது.
இதுவரையில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 32 போட்டிகளில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும் 6 முறை போட்டியானது சமன் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த வருடத்திற்காக ஆஷஸ் தொடரானது தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலியா முதல் போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்த நிலையில் அடுத்ததாக 2 வது போட்டியானது லார்ட் மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியக்கு தொடக்கத்தில் ஒரு விக்கெட் விழுந்தாலும் சிறப்பாக விளையாடிய வார்னர் 66 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதற்கு பிறகு வந்த அஸ்திரலியாவின் பேட்மேன்கள் இங்கிலாந்தின் பௌலர்களை பந்தாட ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 என்ற அற்புதம் ரன்ரேட்டை எட்டியது.
முதல் நாளில் அதிகாட்சமாக ஸ்மித் 129 பந்துகளில் 85 ரன்களும், அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 73 பந்துகளில் 77 ரன்களையும் குவித்தார்கள். டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த நிலையில் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கிரே ஆட்டமிழக்கமல் இருக்கின்றனர். இது இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் நல்ல செய்தியே கிடையாது. ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் பாஸ் பால் முறைப்படி விளையாடுகிறோம் என்று டிக்ளர் செய்தது பெரிய தவறாக சென்று இங்கிலாந்து தோல்வியை சந்திதது.
மேலும் அந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பில்டிங்கும் பல விமர்சனத்திற்கு உள்ளாகியது. முன்னாள் இந்திய வீரர் “கவாஸ்கர்” விக்கெட்டுகளை விழ்த்தாமல் ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக, தொலைக்காட்சிகளை தங்களுடைய பக்கம் திருப்புவதற்காக இப்படிபட்ட பீல்டிங்கை ஸ்டோக்ஸ் அமைக்கிறார் என்று குற்றம் சாட்டினார். அதற்கு பிறகு தற்போது நடக்கும் 2 போட்டியில் பெரிதாக எந்த மாறுதலையும் செய்யாமல் வழக்கமாக டெஸ்ட் ஃபீல்டிங்கை மட்டுமே ஸ்டோக்ஸ் அமைத்துளார். அதோடு இவர்களின் பந்துவீச்சும் சரியாக பலனளிக்காததது விமர்சனத்திற்கு உள்ளக்கியுள்ளது.
மேலும் இந்த இரண்டு போட்டிகளையும் பார்க்கும் போது இங்கிலாந்தின் “பாஸ் பால்” முறையை ஆஸ்திரேலியா சுலபமாக சமாளிக்கிறது என்று தெரிகிறது. அதோடு இங்கிலாந்தின் “பிளாட் பிட்ச்” அஸ்திரலியாவின் “ஸ்மித்” போன்ற திறமைவிக்க வீரர்களும், அற்புதமாக ஸ்பின் செய்யும் “நேதன் லயன்” போன்றவர்க்ளும் சிறப்பாக இந்த பிட்சுக்களை பயன்படுத்தி கொண்டு ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்து வருகின்றனர். நேற்றுதான் முதல் நாள் எனபதினால் எதையும் சொல்லிவிட முடியாது. இங்கிலாந்து இந்த சவாலை எப்படி எதிர்கொள்கிறது பொறுத்திருந்துதான் பார்க்கக் வேண்டும்